பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: பி.எப்.பில் பணம் எடுக்க யு.ஏ.என். எண்ணிற்காக, பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்க தேவையில்லை, இனி நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம். இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல்
பி.எப். சந்தாதார்களுக்கு, புது வசதி, அறிமுகம்,UAN Number,EPFO  portal directly  dinamalar

புதுடில்லி: பி.எப்.பில் பணம் எடுக்க யு.ஏ.என். எண்ணிற்காக, பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்க தேவையில்லை, இனி நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம். இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதில் தொழிலாளரின் பி.எப்., எண் மாறும், அவர் எத்தனை நிறுவனம் மாறினாலும், அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மாறாது. தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண், ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த நம்பர் தான் அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.


latest tamil newsஇந்நிலையில் மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பின் 67 வது தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போதுஇ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். அதில் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என். எண்ணுக்காக தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் விண்ணபித்து பெற தேவையில்லை.

யு.ஏ.என். எண்ணை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். மற்றொன்றாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை பெற டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த இரு வசதிகளும் இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா
02-நவ-201913:28:05 IST Report Abuse
ramakrishnan balasubramanian பென்ஷன் வாங்குபவர்கள் டிசம்பர் மாத இறுதிக்குகள் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு சுலபமான வழியை ஆன் லயனில் அவர் அவர்களே செய்துகொள்ள ஏற்பாடு செய்தால் வயதான காலத்தில் கணனி மையத்தை தேடி அலையை வேண்டியதில்லை.. செய்யுமா மத்திய அரசு ??
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-நவ-201911:11:41 IST Report Abuse
Pugazh V மிகவும் தவறான மடத்தனமான வசதி இது. சைபர் திருடர்கள் வயதான காலத்தில் ரிடயர்டு ஆகிறவர்களின் பி.எப். பை மொத்தமா தொடச்சு எடுத்துண்டு போக வழி செய்கிறார்கள்.
Rate this:
Cancel
02-நவ-201910:16:00 IST Report Abuse
Rajendran Kaliappan இந்த சேவை already இருந்த சேவையே three years before i UAN myself
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X