10 நாட்களில் 4 முக்கிய தீர்ப்புக்கள் : அதிரடிக்கு சுப்ரீம் கோர்ட் 'ரெடி'

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : வரும் நவம்பர் 4 ம் தேதி முதல் 10 நாட்களில் 4 முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வுகள் வழங்க உள்ளது.latest tamil news


அயோத்தி வழக்கு, சபரிமலையில் அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உள்ளிட்ட 4 வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்க உள்ள தீர்ப்புக்கள் நாட்டில் சமூக, மத மற்றும் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அயோத்தி வழக்கில், 1885 ம் ஆண்டு முதல் நடந்து வரும் மிக நீண்ட வரலாற்று சிறப்பு மிக்க வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. இந்து-முஸ்லீம் இடையே மிகப் பெரிய பிரிவினையை ஏற்படுத்தியது அயோத்தி வழக்கு.


latest tamil news


ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அயோத்தி பிரச்னை நடந்து வருகிறது. 1934 ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் பாபர் மசூதியின் 3 மாடங்கள் இடிக்கப்பட்டது. அதனை இந்துக்களிடம் இருந்து வசூலித்த அபராத தொகையை கொண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் கட்டிக் கொடுத்தனர். 1950 ம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்ற இந்து பக்தர், ராமர் சிலையை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கும்படி முதன் முறையாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 1961 ல் வஹ்பு வாரியம் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


latest tamil newsஅயோத்தி வழக்கில் இதுவரை வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தவிர தலைமை நீதிபதி தலைமையிலான மேலும் 3 அமர்வுகள் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறில்லை என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி அலுவலகத்தையும் தகவல் அறியும் உரியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பான மனு ஆகியவை மீதும் அடுத்த 10 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
05-நவ-201911:55:08 IST Report Abuse
narayanan iyer இந்தியா இந்துக்கள் தேசம் என்று சொல்லவேண்டுமானால் அனைவருக்கும் பொதுச்சட்டம் ,திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் கொண்டு வரவேண்டும் .நாம் இனியும் சிறுபான்மையினர் , தாழ்த்தப்பட்டவர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காமல் அனைவரையும் சமம் என்று நிலை நிறுத்தவேண்டும் .
Rate this:
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
02-நவ-201921:26:38 IST Report Abuse
MIRROR தீபாவளிக்கு வைத்த புஸ்வானம் இன்னும் வெடிக்கவில்லையே
Rate this:
Cancel
02-நவ-201914:44:26 IST Report Abuse
நக்கல் சட்டம் சொல்லும் தீர்ப்பை வரவேற்போம்.. அது ராமர் கோவிலுக்கு ஆதரவாக வரவேண்டும் என வேண்டுவோம்.. நல்லதே நடக்கும்...
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
02-நவ-201922:11:22 IST Report Abuse
Nallavan Nallavanகோகோய் ஏற்கனவே எழுதிய தீர்ப்பு ............... ஹிந்துக்களுக்கு எதிராகத்தான் அமையும் ........
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
03-நவ-201907:29:09 IST Report Abuse
Pannadai PandianGogoi is a congress man.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X