பொது செய்தி

இந்தியா

முன்பே எச்சரித்து விட்டோம்: வாட்ஸ்ஆப் பதில்

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில் உள்ள சில பயனாளர்களின் வாட்ஸ்ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக மே மாதமே இந்திய அதிகாரிகளை எச்சரித்து விட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் பதிலளித்துள்ளது.latest tamil newsஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கில் பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷன் உதவியுடன், சுமார் 1400 பேர் கண்காணிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியானது. பெகாசஸ் என்ற இஸ்ரேலிய ஸ்பைவேர் மென்பொருள் மூலம் அவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறி இருந்தது. இந்தியர்கள் பலர் உளவு பார்க்கப்பட்டதாக கூறியதால், இது பற்றி நவ.,4 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


latest tamil newsஇதனையடுத்து வாட்ஸ்ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர் இந்தியாவிற்கு அளித்துள்ள விளக்கத்தில், பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கே நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்தியர்களின் கணக்குகள் உளவு பார்க்கப்படுவது குறித்து மே மாதமே இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, பாதுகாப்பு பிரச்னைகளை சரி செய்யம்படி கூறி இருந்தோம். சர்வதேச அரசு அமைப்புக்களிடமும் இதை வலியுறுத்தி இருந்தோம். என்எஸ்ஓ எனப்படும் உளவு மால்வேர் கணக்கர்களின் தகவல்களை குறிவைப்பதாக நாங்கள் கண்டறியந்த உடனேயே கோர்ட்டில் தெரிவித்து விட்டோம்.
இந்திய அரசின் பிரச்னையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். பயனார்கள் அனுப்பும் தகவல்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் வாட்ஸ் ஆப் தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
02-நவ-201922:18:22 IST Report Abuse
Vena Suna Ban Facebook and Whatsapp ...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
02-நவ-201919:18:31 IST Report Abuse
madhavan rajan அரசு எளிதாக இதை அணுகலாம். சிகரெட் பாக்கெட் மேல் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும் டாஸ்மாக் கடைகளில் குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்திருப்பது போல. வாட்ஸ் ஆப் உபயோகிப்பது ஆபத்தானது .. பாதுகாப்பானது அல்ல என்று ஒரு மெசேஜ் எல்லா போன்களுக்கும் தினமும் அனுப்பிவிட்டால் கடமை முடிந்தது. பிறகு அவரவர் பாடு. அரசு பொறுப்பில்லை. எங்ககிட்டயேவா.............?
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா எச்சரிக்கையை மதித்து மொத்தமாக இந்தியாவில் இதை தடை செய்துவிட்டால் என்ன? நன்மையை விட தீமையே இதுபோன்ற செயலிகளால் ஏற்படுகிறது. மக்கள் ஒன்றினை புரிந்து கொள்வது நலம், நீங்கள் பகிரும் கருத்துக்கள், செய்திகள், பரப்பும் வதந்திகள்,படங்கள், காணொளிகள் எந்த ஒரு நேரத்திலும் யாரோ வேறு பல நபர்களால் படிக்க முடியும், அதை வைத்து உங்களை விசாரிக்கவும் முடியும். கேவலமான சமூக பிரிவினை, கிழற்சிகளுக்கு விலை போகாமல், இதுபோன்ற செயலிகளை நல்ல வழியில் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் குப்பைகள் போடுவதை குறைத்துக்கொண்டு அதை ஆக்க பூர்வமாக செயல்படுங்கள். வேறொருவர் பகிர்ந்த செய்தி என்றாலும் அதை நீங்கள் மறுபடியும் பகிர்ந்தால் அதுவும் உங்களுடயதே சரியான விழிப்புணர்வு இல்லை என்றால் இது போன்ற ஏடா கூடங்கள் தவிர்க்க முடியாதது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X