சம்பவம் செய்தி

தமிழ்நாடு

‛பிகில்'-க்காக ‛ஜெயில்': கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர்: ‛கம்முனு, ஜம்முனு' விஜய்

Updated : நவ 03, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (216)
Share
Advertisement
கிரு்ஷ்ணகிரி: பிகில் படத்திற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்தியதால் ஏற்கனவே 32 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணி வருகின்றனர் விஜய்யின் ரசிகர்கள். இது தொடர்பாக நேற்றும் 18 பேர் கைது செய்யட்டனர். தங்கள் பிள்ளைகள் சிறை செல்வதை கண்ட இவர்களது பெற்றோர் கண்ணீரும், கம்பலையுமாக போலீஸ் நிலையத்துக்கும் கோர்ட்டுக்கும் அலைந்துகொண்டு இருக்கின்றனர். விஜய்

கிரு்ஷ்ணகிரி: பிகில் படத்திற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்தியதால் ஏற்கனவே 32 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணி வருகின்றனர் விஜய்யின் ரசிகர்கள். இது தொடர்பாக நேற்றும் 18 பேர் கைது செய்யட்டனர். தங்கள் பிள்ளைகள் சிறை செல்வதை கண்ட இவர்களது பெற்றோர் கண்ணீரும், கம்பலையுமாக போலீஸ் நிலையத்துக்கும் கோர்ட்டுக்கும் அலைந்துகொண்டு இருக்கின்றனர்.



latest tamil news


விஜய் நடித்து வெளியான 'பிகில்' திரைப்படத்தின் சிறப்பு காட்சி தாமதமானதால் கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 18 பேர் கைதாகியுள்ளனர். அதில் 7 பேர் சிறுவர்கள். ஒரு நடிகரின் படத்தை பார்க்க, ரகளை செய்து, சிறைக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளை பார்த்த பெற்றோர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட் வாசலில் சோகத்துடனும், கண்ணீருடன் நின்றிருந்தனர். பேனர் விஷயத்தில், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என 'பிகில்' இசை வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ரசிகர்கள் ரகளை செய்தது தொடர்பாக இதுவரை வாய்த்திறக்கவில்லை.


விஜய் நடித்து அக்.,25ம் தேதி வெளியான படம் ‛பிகில்'. இப்படத்தின் சிறப்பு காட்சிக்காக ஒரு போராட்டம் நடந்து, இறுதியில் அரசு அனுமதித்தது. கிருஷ்ணகிரியில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட தாமதமாவதாக கூறி விஜய் ரசிகர்கள் சிலர் அந்த பகுதியில் இருந்த பொது சொத்துக்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் ஏற்கனவே 32 பேரை கைது செய்தனர். இப்போது மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் சிறுவர்கள்.


latest tamil news



18 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 7 பேர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கும், 11 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஒரு நடிகரின் படத்தை பார்ப்பதற்காக இப்படி ரகளை செய்து, தங்கள் பிள்ளைகள் சிறைக்கு செல்வதை பார்த்த பெற்றோர்கள் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட் வாசல் முன் சோகத்துடனும், கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர். இன்னும் சிலரோ தங்கள் முகத்தை வெளியே காட்டாத அளவுக்கு மூடியபடி சென்றனர்.


சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. ஒரு காட்சி இல்லாவிட்டால் அடுத்த காட்சி. இதற்கு போய் பொது சொத்துக்களை சேதப்படுத்தி, இப்படி வாழ்க்கையையும் வீணாக்கி, பெற்றோரையும் கலங்க வைக்கும் இது போன்ற ரசிகர்களை என்னவென்று சொல்வது.


latest tamil news



சரி, ரசிகர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் இந்த விஷயத்தில் நடிகர் விஜய், இதுவரை வாய் திறக்கவே இல்லை. பேனர் விஷயத்தில், ‛‛என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் நான் சும்மா இருக்க மாட்டேன்'' என்கிற ரீதியில் பிகில் பட இசை வெளியீட்டில் பேசிய விஜய், தன் ரசிகர்களை இது போன்று செய்யாதீர்கள் என கண்டிக்கவில்லை., ஒரு அறிக்கை கூட விடவில்லை. படம் வெளியாகும் போது மட்டும் அரசியல் பேசிவிட்டு, அதையை படத்திற்கு ஒரு பரபரப்பாக்கி, விளம்பரமும் தேடி கொடுத்துவிட்டு ‛கம்னு, உம்முனு, ஜம்முனு' இருந்துவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (216)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
08-நவ-201911:14:56 IST Report Abuse
S.BASKARAN சினிமா கூத்தாடிகளுக்கு சேவை செய்கிறார்கள் போலும். தமிழ் நாடு இளைஞர்கள் செயல் முற்றிலும் மாறவேண்டும். தங்களின் சுய மரியாதையை நிலை நிறுத்தவேண்டும்.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
06-நவ-201912:02:14 IST Report Abuse
TamilArasan ஒரு பயலையும் வெளியே விடாதீர்கள் - இது பொது சொத்தை சேத படுத்தும் மத்தவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்...
Rate this:
Cancel
saravanan - dindugal,இந்தியா
05-நவ-201913:53:15 IST Report Abuse
saravanan Avan kodakura kasuku nadichudu poiruvan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X