தாய்லாந்தில் தமிழில் திருக்குறள் படித்த மோடி

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (31+ 59)
Advertisement

பாங்காக்: தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அவர் திருக்குறளை தமிழில் படித்து மேற்கோள்காட்டி அதற்கு பொருளும் கூறினார்.


பாங்காங்கில் நடந்த சுவாஸ்தி பிஎம் மோடி என்ற நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேச்சை துவக்கியதும், தமிழில் 'வணக்கம்', இந்தியில் 'நமஸ்கார்' என்று கூறி பேச்சை தொடங்கினார்.இந்தியா மற்றும் தாய்லாந்து உறவுவிழாவில் மோடி பேசியதாவது: நான் '3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாய்லாந்து வந்தேன். அப்போது எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.இந்தியா தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளது. இருநாடுகளும் பொதுவான சிந்தனை உடையவை. தாய்லாந்தில் நான் இப்போது இருப்பதை என் தாய்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே! உங்களுடைய கடின உழைப்புக்கும் பங்களிப்புக்கும் என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் தாய்லாந்து உணர்வுபூர்வமாக இணைந்துள்ளன. உலகில் வாழும் இந்தியர்களின் அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.


இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி இந்தியர்கள் ஓன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவோம். இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்கி உள்ளனர். 2019 தேர்தலில் 60 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதில் அதிக பெண்கள் ஓட்டளித்துள்ளனர், இது வரலாற்று சிறப்பு மிக்கது. ஒருசிலர் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை, இருப்பினும் யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் என்னை பிரதமராக்கி உள்ளனர். காஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவோம்.
இந்தியாவில்பெண்கள் சிரமமின்றி, புகையில்லாத சமையல் செய்வதற்கு எட்டுக்கோடிக்கும் மேலாக இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் வங்கிகளுடன் இணைத்துள்ளோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.' இவ்வாறு மோடி பேசினார்.

பேச்சின் இடையே பிரதமர் மோடி தமிழில் திருக்குறளை வாசித்தார். கீழே தரப்பட்டுள்ள குறளுக்கு பொருளும் கூறினார். இதனை ரசித்த மக்கள் மோடி, மோடி என கோஷங்கள் எழுப்பியதுடன் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளின் பொருளை எடுத்துரைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (31+ 59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
03-நவ-201911:20:16 IST Report Abuse
வந்தியதேவன் ////தமிழில் திருக்குறள் படித்த மோடி//// தமிழ்ல படிக்குறது... ஒன்பதாவது உலக அதிசயமா என்ன? இது என்ன கூத்தா இருக்குது? தலைப்பிலிருந்தே... தெரிஞ்சிக்கணும், புரிஞ்சக்கணும்... ஆமா..... திருக்குறள் தமிழனான திருவள்ளூவர் தானே எழுதினார்... அதனை தமிழில்தான் படிக்கணும்.. திருக்குறள இந்திக்காரரான தௌமேஹா பகால்டி சர்மா...வா எழுதினார்...?
Rate this:
Share this comment
RK NATARAJ - madurai ,இந்தியா
04-நவ-201918:36:22 IST Report Abuse
RK NATARAJஒரு நாட்டின் பிரதமர் தமிழ் தெரியாதவர், தமிழில் பேசின கேளி, கிண்டல். உங்க தமிழ்நாட்டு தலைவர்கள் யாராவது வெளி நாட்டில் , ஹிந்தி பேசுவார்களா?...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
03-நவ-201900:59:58 IST Report Abuse
jagan "ஜோசப்" இன் தமிழாக்கம் "சூசை". "சோசப்பு" என்பது தமிழாகாது....
Rate this:
Share this comment
Cancel
03-நவ-201900:24:45 IST Report Abuse
srinivasan R புகழு, அவரவர் செல்லும் காரணத்தை பொறுத்தே கருத்துக்கள் அமையும்.. உன் மனசாட்சிப்படி சொல்லு, ராகுலு நம் பாரத நாட்டின் பிரதமராக என்ன தகுதி இருக்கிறது.. அந்த கழிசடைக்கு வக்காலத்து வாங்குவதை தயவு செய்து நிறுத்தவும். ராகுலு குறித்த உங்கள் கருத்து எல்லாம் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X