இந்தியாவில் விற்பனையாகும் 49 மருந்துகள் தரமற்றவை

Added : நவ 03, 2019 | கருத்துகள் (4)
Advertisement
இந்தியாவில் விற்பனையாகும் 49 மருந்துகள் தரமற்றவை

சென்னை : 'இந்தியாவில் விற்பனையாகும், 49 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், சந்தையில் உள்ள மருந்துகளின் தரம் குறித்து, மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்து, தரமற்ற மருந்துகள் இருந்தால், அதன் விற்பனையை தடை செய்து வருகின்றன.ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், 2,085 மருந்துகளை, மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்தன.

அவற்றில், 2,036 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய, காய்ச்சல், சளி, குடற்புழு நீக்கம், கிருமி தொற்று, வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கான, 49 மருந்துகள் தரமற்றவை.இவை, குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது. தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்த விபரங்களை, https://cdscoonline.gov.in என்ற இணைதளத்தில், மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
04-நவ-201919:30:28 IST Report Abuse
spr காய்ச்சல், சளி, குடற்புழு நீக்கம், கிருமி தொற்று, வயிற்றுப் புண் இவை பொதுவாக பலருக்கும் வரும் பிரச்சினையே எனவே அதனை வாங்குவோர் அதிகம் அந்த வகையில், அந்த மருந்துகளின் பெயர்,தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை தெரிவித்தால் மக்கள் கவனத்துடன் இருப்பார்கள் தினமலர் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
04-நவ-201911:24:55 IST Report Abuse
karutthu அந்த மருந்துகளின் பெயர்,தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை தெரிவித்தால் மக்கள் கவனத்துடன் இருப்பார்கள்?ஒரு மருந்தை பல நிறுவனங்கள் பல பெயர்களில் தயாரிப்பதால் இந்த பிரச்சினை நிலவுகிறது .ஒரு சிறிய நிறுவனம் தான் தயாரிக்கும் மருந்துகளை ஒரு பெரிய நிறுவனத்தின் மூலம் சந்தை படுத்துவதால் இந்த மாதிரி பிரச்சினை வருவதற்கு காரணமாகலாம் முழு தகவல்களையும் வெளியிடுங்கள் .
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
07-நவ-201903:19:12 IST Report Abuse
meenakshisundaramஅதற்குத்தான் வெப் சைட் பெயரை தந்துள்ளார்கள் அதை கூட பார்க்க சோம்பேறித்தனமா?...
Rate this:
Share this comment
Gopinathan S - chennai,இந்தியா
07-நவ-201916:56:24 IST Report Abuse
Gopinathan Sஅந்த வெப்சைட் வேலை செய்யவில்லை..அதை பார்த்தீங்களா முதல்ல?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X