பொது செய்தி

இந்தியா

வீணாகிறது மக்களின் வரிப்பணம்

Updated : நவ 03, 2019 | Added : நவ 03, 2019 | கருத்துகள் (51)
Share
Advertisement

புதுடில்லி: கடந்த லோக்சபாவின் சபாநாயகராக இருந்தவர், பா.ஜ.,வைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன். 2019 லோக்சபா தேர்தலில், இவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.latest tamil newsஇதனால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.இவர் சபாநாயகராக இருந்த போது, 2016ல், 'ஜாகுவார்' என்கிற விலை உயர்ந்த கார், இவருக்காக வாங்கப்பட்டது. அப்போது, அதன் விலை, 48 லட்சம் ரூபாய். இவர், ஏற்கனவே வைத்திருந்த, 'டொயோட்டோ' கேம்ரிக்குப் பதிலாக, இந்த காரைத் தேர்ந்தெடுத்தார் சுமித்ரா மகாஜன்.

இந்த காரில் பயணம் செய்த இவர், அடுத்த நாளே, 'இந்த கார் வேண்டாம், பழைய காரிலேயே பயணிக்கிறேன்' என, புத்தம் புது காரை ஓரங்கட்டிவிட்டார். இது, 13 கி.மீ., தான் பயணம் செய்துள்ளது. பிறகு கராஜுக்கு சென்றுவிட்டது.'இந்தக் காரில் பின்னால் உட்கார முடியவில்லை; கால் வைக்கும் இடம் மிகவும் குறைவாக உள்ளது; உட்கார மிகவும் கஷ்டமாக இருக்கிறது' எனக் கூறிய சுமித்ரா, 'நான், ஜாகுவாரில் இரண்டு மாடல்களைப் பார்த்தேன். என் அலுவலகம், நான் தேர்ந்தெடுத்த மாடலை வாங்காமல், வேறொரு மாடலை வாங்கி விட்டது' என, சாக்கு சொல்லிவிட்டாராம்.


latest tamil newsபுதிய சபாநாயாகர் ஓம் பிர்லாவும், இந்த ஜாகுவார் காரை பயன்படுத்துவதில்லை. இவருக்காக, புதிய டொயோட்டோ கேம்ரி ஹைபிரிட் என்ற கார் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை. 37 லட்சம் ரூபாய். சுமித்ரா மகாஜன் வாங்கிய அந்த ஜாகுவார் காரை, இப்போது யாரும் பயன்படுத்துவதில்லை; கராஜில் துாங்குகிறது. விரைவில், இந்தக் கார், ஏலத்திற்கு விடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

கடந்த, 18 ஆண்டுகளில், சபாநாயகருக்காக, ஐந்து கார்கள் வாங்கப்பட்டுள்ளன. 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'அம்பாசிடர்' கார், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'ஹோண்டா' அகார்ட், 21 லட்சம் ரூபாயில் டொயோட்டா கேம்ரி, 48 லட்சம் ரூபாயில் ஜாகுவார். இப்போது, 36 லட்சம் ரூபாயில் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் வாங்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகிறது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
03-நவ-201916:07:05 IST Report Abuse
Balaji யார் ஆட்சியில் இருந்தாலும் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும்...... இவர்களுக்கு என்ன கவலை இதைப்பற்றி.......
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
03-நவ-201915:59:29 IST Report Abuse
Rajas சரி ஒரு காந்தி அல்லது நேரு மட்டும் எப்படி தலைவராக முடிந்தது. காந்தி அறிவித்த உப்பு சத்யா கிரகம், அந்நிய ஆடை புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களுக்கு மக்கள் எப்படி ஆதரவு தந்தார்கள். இத்தனைக்கும் communication வசதி இல்லாத மற்றும் தடை செய்ய பட்ட காலம் அது. காந்தி இறந்த செய்தி கேட்டு பல லட்சக்கணக்கான மக்கள் மொட்டை அடித்து கொண்டார்களே ஏன். அவர்கள் எல்லாம் உண்மையில் சுதந்திரத்திற்க்காக போரிடவில்லையா.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
03-நவ-201918:40:08 IST Report Abuse
s.rajagopalanஎன்னங்க ....இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க ....அது மகாத்மா காந்தி காலம்.. இப்போ சோனியா காந்தி காலம் ...மலைக்கும் மடுவுக்கும்...... நம் நாட்டில் பல பேர் கோடி ருபாய் விலையில் கார் வாங்க தயார் ...ஆனால் பணம் எங்கேயிருந்து வந்திச்சு என்று வருமானவரிக்காரன் தொல்லை கொடுப்பான்.... அதுவும் இப்போ.... இந்த மோடி தொல்லை தாங்கமுடியலே...
Rate this:
Rajas - chennai,இந்தியா
03-நவ-201923:15:11 IST Report Abuse
Rajasவருமான வரித்துறையின் நாடகம் சாந்தி சிரிக்கிறது. அந்த ரெய்டு இந்த ரெய்டு, கோடிக்கணக்கில் பணம், நகை, சொத்துக்கள் கண்டு பிடிப்பு என்று ரெய்டின் போது சொல்லப்படுகிறது. பின்னர் எல்லாம் அமைதியாகி விடுகிறது. அரசின் கஜானாவிற்கு எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை. அப்படியானால் எங்கே போகிறது....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
03-நவ-201914:05:59 IST Report Abuse
Vena Suna ஓட்டு போட்டவன் ஓட்டு வீட்ல இருக்கான்...ஓட்டு வாங்கினவன் கோட்டு போட்டு சுத்தறான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X