எடியூரப்பா 'சர்ச்சை' வீடியோ; கோர்ட்டுக்கு செல்லும் காங்.,

Updated : நவ 03, 2019 | Added : நவ 03, 2019 | கருத்துகள் (36)
Advertisement
எடியூரப்பா, அமித்ஷா, வீடியோ, பாரதியஜனதா, காங்கிரஸ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குமாரசாமி அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், பாஜ., தலைவர் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல காங்., முடிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக அந்த கூட்டணியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பின்னர், எடியூரப்பா தலைமையிலான பாஜ., அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா, பாஜ., நிர்வாகிகளிடம் பேசுவது போன்ற வீடியோ வெளியானது.
அதில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் அமித்ஷா மேற்பார்வையில் தான் நடந்தது. நம்மை ஆளுங்கட்சியாக அமரவைத்த அந்த 17 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பக்கம் பாஜ., கட்சியினர் நிற்க வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து எடியூரப்பா தரப்பில் ஆட்சேபனை கூறவில்லை எனினும், கட்சியின் நலன் கருதியே பாஜ.,வினரிடம் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பணம், அதிகாரத்தை பாஜ., எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவும் எடியூரப்பாவும் செய்தது ஜனநாயகப் படுகொலைக்கான சதி என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் குற்றம் சுமத்தியுள்ளார். எடியூரப்பாவின் இந்த வீடியோ பேச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்வு காண காங்., முடிவு செய்துள்ளதாக அம்மாநில காங்., நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவில் அமித்ஷா குறித்தும் இருப்பதால் அவர், பதிலளிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜ., சார்பில் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
03-நவ-201918:35:08 IST Report Abuse
Rajavel மோடி, அமித்ஷா , எடியூரப்பாவுக்கு காப்பு ரெடி
Rate this:
Share this comment
HSR - MUMBAI,இந்தியா
03-நவ-201918:57:41 IST Report Abuse
HSRநீங்களே வந்து போடுங்க.....
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
03-நவ-201917:19:40 IST Report Abuse
Believe in one and only God பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
03-நவ-201916:03:36 IST Report Abuse
Suri எடியினால் பீ ஜெ பீ ,,மானம் கப்பல் ஏறுகிறது. அமித் ஷா பார்த்துக்கொண்டிருக்கிறார்? ஹி ஹி ஹி 75 cutoff எல்லாம் எடிக்கு முன் துச்சம். ஏனென்றால் கர்நாடக ஆட்சி அதிகாரம் ரொம்ப முக்கியம். 75 வயதாவதது மண்ணாவது.....அனைவருக்கும் ஒரு சட்டம். எடியூரப்பாவுக்கு ஒரு சட்ட்டம். மற்ற எல்லோருக்கும் ஒரு சட்டம்.
Rate this:
Share this comment
Ganesh Shetty - chennai,இந்தியா
03-நவ-201922:33:38 IST Report Abuse
Ganesh Shettyஅதாவது மத்திய மேலிடம் இந்த எட்டியுரைப்பவை தற்போது கண்டுகொள்வதில்லை மேலும் இவர் ஏற்கனவே ப ஜ க விட்டு தனியாய் பிரிந்து கட்சி ஆரம்பித்து விட்டு மீண்டும் மோதிஜி வந்தவுடன் இவர் கட்சியை கலைத்துவிட்டு ப ஜ க வில் ஐக்கியமானவர் மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெல்லாரி சகோதரர்களை பற்றி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர்களை பற்றிய முழு தகவல்களையும் தூக்கிகொடுத்தவர் அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் ஆட்சியில் திரு.கருணாகர ரெட்டியை காங்கிரஸ் அரசு உள்ளே வைக்க முடிந்தது.மேலும் அதே போர்முலாவை தற்போது ப ஜ க தலைவர்களை மிரட்டுகிறார்.ஏனேனில் மேலிடம் இரண்டு துணை முதல்வர்களை அமர்த்தி இவரை டம்மியாக்கியது அந்த ஆத்திரத்தில் இவராகவே ரெகார்டிங் செய்து காங்கிரஸிடம் கொடுத்துவிட்டார் வேறு ஒன்றும் இல்லை.ஆனால்நம்பத்தன்மை அற்ற மனிதர் இவரை வெளியேற்றினால் ப ஜ க வளரும்.இவரது மதமான லிங்காயத்துகளே இவரை விரும்பவில்லை.இவர் தன்னை முன்னிறுத்தி தான் ப ஜ க இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.ஒட்டு போட்டது மோதிஜிக்குத்தான் இவருக்கு இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X