கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்; சென்னையில் குழந்தை பலி

Added : நவ 04, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : சென்னை கொருக்குப்பேட்டையில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வயது குழந்தை மாஞ்சா நுால் கழுத்தை அறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தொடரும் மாஞ்சா நுால் விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்தவர் கோபால் 38; தனியார் நிறுவன ஊழியர். அவர் மனைவி சுபித்ரா 30. இவர்களது 3 வயது மகன் அபினேஸ் சரவ்.நேற்று மாலை கோபால் தன் மனைவி மகனுடன்
 கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்; சென்னையில் குழந்தை பலி

சென்னை : சென்னை கொருக்குப்பேட்டையில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வயது குழந்தை மாஞ்சா நுால் கழுத்தை அறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தொடரும் மாஞ்சா நுால் விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்தவர் கோபால் 38; தனியார் நிறுவன ஊழியர். அவர் மனைவி சுபித்ரா 30. இவர்களது 3 வயது மகன் அபினேஸ் சரவ்.நேற்று மாலை கோபால் தன் மனைவி மகனுடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை அண்ணா நகரில் உள்ள உறவினர்வீட்டிற்கு சென்று வீடு திரும்பினார்.கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் புதிய பாலத்தில் சென்று கொண்டிருந்த போதுதிடீரென குறுக்கிட்ட பட்டம் விடும் மாஞ்சா நுால் இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் அமர்ந்திருந்த குழந்தை அபினேஸ் சரவ்வின் கழுத்தில் சிக்கியது.

கழுத்தறுபட்ட நிலையில் குழந்தை மீட்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி விரைந்து சென்று 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வுசெய்தார். ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாஞ்சா நுாலில் பட்டம் விட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மாஞ்சா நுால் அறுத்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-நவ-201921:24:38 IST Report Abuse
THINAKAREN KARAMANI மாஞ்சா நூலை விற்கக்கூடாது என்ற தடைச் சட்டம் இருக்கிறதல்லவா. கடுமையாக அமல்படுத்த வேண்டியதுதானே. பாவம் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிர் போய்விட்டதே. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
04-நவ-201916:13:00 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj அவசர தடுப்பு சதாம் மஞ்சா நூலுக்கு இனிதான் வரும் போலும் ஏன் அசம்பாவிதம் நடக்கும் வரை அமைதி காக்கவேண்டும் காஞ்சிபுரத்தில் நகராட்சியே மகேந்திரபல்லவன் தெருவில் சாக்கடை கிணறு மோட்டார் அறை எழுப்பி ஆக்கிரமிப்பு செய்து கொசுக்கடி வாகன நெருக்கடி டெங்கு உற்பத்தி செய்துவருகிறது எவரும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்காமலே உள்ளது காரணம் அசம்பாவிதம் நடக்கட்டும் என்றுதான் polum
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
04-நவ-201911:01:03 IST Report Abuse
venkatan மாஞ்சா நூலை தடை உண்மை உடன் செயல்படுத்துக..இதை கிரிமினல் சட்டத்தின் கீழ் கொணர்க. fine விதித்து 6 மாசம் உள்ளே போடுங்க. பாதிக்கப்பட்டவர் மறுத்தால் குற்றம் செய்தவருக்கு ஆயுள் கொடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X