பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.15 ஆயிரம் கோடி திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Updated : நவ 06, 2019 | Added : நவ 04, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சி.எம்.டி.ஏ, வளர்ச்சி குழுமம், கட்டுமான பணி, ஒப்புதல், புரிந்துணர்வு ,ஒப்ப்நதம்

சென்னை : உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்பட்ட புரிந்துணைர்வு ஒப்பந்தங்களில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான திட்டங்களுக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த, தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வகையில், இந்தாண்டு ஜனவரி, 23, 24ல், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில், 304 நிறுவனங்கள், மூன்று லட்சத்து, 431 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன.

இவற்றில், சி.எம்.டி.ஏ., தொடர்பாக, 100 நிறுவனங்கள், 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது உறுதியானது. இதன் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துகிறதா என்பது குறித்து, சமீபத்தில் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுவரை, 47 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்காக, 40 திட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மேலும், 3,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான, ஏழு விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

மீதமுள்ள, 17 ஆயிரத்து, 676 கோடி ரூபாய் மதிப்பிலான, 53 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இதுவரை வரவில்லை. இந்த விண்ணப்பங்கள் வந்தவுடன், ஒப்புதல் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-நவ-201913:03:51 IST Report Abuse
Jayvee கொள்ளை வருமானம் ஈட்டியிருக்கும் தரம்கெட்ட அதிகரைகளின் வீட்டில் சோதனை நடக்குமா ? அமைச்சர்கள் வீட்டிலும் இது நடக்க வேண்டும் .. எதிர்க்கட்சி தலைவர் (சுடலை கான்) வீட்டிலும் இது நடத்தப்படவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
05-நவ-201910:56:04 IST Report Abuse
narayanan iyer அனுமதி அளித்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை செய்தால் நன்றாக இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
05-நவ-201906:58:19 IST Report Abuse
svs //.....40 திட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.....// ......இன்னமும் விண்ணப்ப அளவில்தான் உள்ளது ....ஊழலில் ஊறியது சி.எம்.டி.ஏ என்பது தெரிந்த விஷயம் ....ஏற்கனவே வாகன தொழில் நசித்து போய் உள்ளது.....அது மீண்டு வர நாளாகும் .......மேலும் இங்கு தொழில் வளர்ச்சிக்கு எதிர்ப்பு .....முட்டுக்கட்டை போடவே தனியாக ஆட்கள் உள்ளார்கள் ....இந்த விண்ணப்பங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லையென்றால் மேலும் வேலையின்மை தமிழ் நாட்டில் அதிகரிக்கும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X