அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவி உடையில் திருவள்ளுவர்: பா.ஜ.,வால் சர்ச்சை

Updated : நவ 06, 2019 | Added : நவ 04, 2019 | கருத்துகள் (95+ 213)
Advertisement
திருவள்ளுவர், காவி உடை, சர்ச்சை, வெள்ளை நிறம், துரோகம்

சென்னை : தமிழக, பா.ஜ.,, சார்பில், 'டுவிட்டர்' பக்கத்தில், காவி உடையில், விபூதி அணிந்த, திருவள்ளுவர் படத்தை வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்பது, யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும், அவர் இப்படித் தான் இருந்திருப்பார் என, ஒரு தோற்றத்தை கொடுத்து வந்தனர்.


வெள்ளை நிறம்

அதன்பின், தமிழக அரசு, திருவள்ளுவர் படம் என, ஒன்றை அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் அவர், விபூதி அணியவில்லை. வெள்ளை நிற உடை உடுத்தியிருப்பார். இரு தினங்களுக்கு முன், பிரதமர் நரேந்திரமோடி, தாய்லாந்தில், அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட, திருக்குறளை வெளியிட்டார்.


துரோகம்


அதன் தொடர்ச்சியாக, தமிழக, பா.ஜ., சார்பில், 'டுவிட்டர்' பக்கத்தில், நெற்றியில் விபூதி, காவி உடை அணிந்த, திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது. அந்த படத்தின் கீழே, 'கடவுளை துாற்றி, இறை நம்பிக்கை கொண்டோரை பழிப்பவருக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? 'அன்றே வள்ளுவர் சொன்னதை, இன்று, தி.க.,வும், தி.மு.க.,வை நம்பி வாழும் கம்யூனிஸ்ட்டுகளும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர். இதற்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

அவர், 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற வள்ளுவரை, காவி கூட்டம், தன் கட்சிக்கு கச்சை கட்ட துணைக்கு அழைப்பது, தமிழ் துரோகம். 'எத்தனை வண்ணம் பூசினாலும், சாயம் வெளுத்துவிடும். வண்ணம் பூசுவதை விட, திருக்குறளை படித்து திருந்த பாருங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.


கண்டனம்


அதே போல், கம்யூ., கட்சிகள், வி.சி., உள்ளிட்டவை, பா.ஜ.,வுக்கு கண்டனம் தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூவருக்கு விபூசி, காவி உடை அணிவித்தது சரியா, தவறா என, சர்ச்சை எழுந்துள்ளது.


கடும் மோதல்


சமூக வலைதளங்களில், இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில், சமூக விரோதிகள், திருவள்ளுவர் சிலையை அவமதித்தது, எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் அமைந்துவிட்டது. தமிழக பா.ஜ., சார்பில், நேற்று வெளியிடப்பட்ட பதிவில், 'பிரதமர் மோடி, திருக்குறளை முன்னெடுத்து சிறப்பிப்பதை, இருட்டடிப்பு செய்ய, கருப்பு சட்டைக்காரர்களால், போலியாக கட்டமைக்கப்பட்டதே, திருவள்ளுவர் குறித்த சர்ச்சை.

'எதிர்வினை ஆற்ற முடியாமல், காவியம் பிழையென்று கறுப்பு சாயம் பூச பார்த்துள்ளனர், கறுப்பு சட்டை கயவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தனர். பிரதமர் மோடி, திருக்குறளை முன்னெடுத்து சிறப்பிப்பதை, இருட்டடிப்பு செய்ய, கருப்பு சட்டைக்காரர்களால், போலியாக கட்டமைக்கப்பட்டதே, திருவள்ளுவர் குறித்த சர்ச்சை.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (95+ 213)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - Chennai,இந்தியா
08-நவ-201912:32:06 IST Report Abuse
நக்கீரன் சரி முதலில் ஒன்றை தெளிவு படுத்த்துங்கள் வள்ளுவர் கிறித்துவரா அல்லது முஸ்லிமா பதில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களால் முடியாது ஏனெனில் வள்ளுவர் காலம் இந்த இரண்டு மதத்திற்கும் அப்பாற்பட்டது அதாவது கிறித்து பிறப்பதற்கு முன்.. சரி இப்போது அவர் மற்ற இரு மதத்தையும் சாராதவர் என்று உறுதியாக கூறிவிட முடியும் தானே..இப்போது முக்கிய பிரச்சினைக்கு வருவோம் அவருக்கு ஏது மதம் அதானே பலரது கேள்வி ஒருவரது மதம் என்ன என்பதை அவரது வாழ்வியல் முறையை வைத்துதான் உறுதி செய்ய முடியும் காரணம் அப்போது இந்து என்ற நாமகரணம் சூட்டப்படா குழந்தை ஏற்கனவே பிறந்து பரிணாம வளர்ச்சி அடைந்து தனக்கு என்று ஒரு வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்து கொண்டது நமது இறை வழிபாடு, கலாச்சாரம், பண்பாடு, வீரம், நம்பிக்கை, மொழி என்று இப்படி அனைத்தும் இந்து மதம் சார்ந்தே பின்னி பிணைந்தது ஆகவே தான் இதனை ஒரு வாழ்வியல் முறை என்று சுப்ரீம் கோர்ட் சுட்டி காட்டியுள்ளது. அப்போது நமது இந்து மதம் என்பது வாழ்வியல் முறையை பின்பற்றியதே.. மேலும் அவர் எந்த ஒரு இடத்திலும் தன்னை மத சார்பற்றவராக காட்டிக்கொண்டது இல்லை அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தனது குறளில் அவர் இந்து மத கடவுள்களான திருமால், எமன், பிரம்மா, இந்திரன், வருணன், லட்சுமி, மூதேவி போன்ற பெயர்களை பயன்படுத்தி பாடல் இயற்றி இருப்பதிலேயே ஒன்று விளங்க வில்லையா அவர் எந்த மத கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார் அதனை பின்பற்றியே தனது நூலையும் இயற்றி உள்ளார் என்று.. அடுத்து அவரது உருவம் நமக்கு தெரியாது அப்படியானால் எவ்வாறு அவரது உருவம் தீர்மானிக்கப்பட்டது உதாரணம் அவர் கூறிய பாடல்களின் வரிகளில் இருந்துதான் அவர் உருவம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது.. திருநீறும் ருத்ராச்சமும் அவரது அடையாளம் இது அணைத்து முனிவர்களும் அந்த காலங்களில் அணிந்த ஒன்று..ஆனால் இந்த திராவிட ஆட்சியாளர்கள் ஏன் அவர் மத அடையாளத்தை அழித்து வெறும் வெள்ளை உடையுடன் மாற்றி அமைத்தனர்..வள்ளுவர் கோட்பாடு தான் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது ஒழிய வள்ளுவர் மதம் அவர்களுக்கு வேண்டாம்..சரி அவர் ஒரு கிருத்துவர் என்று முனைவர் பட்டம் வாங்கினார்களே அப்போது எங்கே சென்றீர்கள் இந்த நடுநிலை வாதிகள் இல்லை முஸ்லீம் மதத்தவர் அவர் தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடிய பொழுது என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்.. இதே திராவிட கருணாநிதி கைப்பட முன்னுரை எழுதி அதனை வரவேற்று இருக்கிறார் அதற்கு பெயர் என்ன அப்போதெல்லாம் இது ஏன் பேசு பொருளாக இல்லை காரணம் அவர் மெல்ல மதம் மாற்றப்பட்டார் அவர் ஒரு இந்து மதம் சார்ந்தவர் என்பது இங்கு உள்ள கொலுட்டி திராவிட கும்பலுக்கு ஏற்புடையதாக இல்லை...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
08-நவ-201904:51:54 IST Report Abuse
meenakshisundaram திருவள்ளுவர் அநேகமாக ஒரு முஸ்லீம் ஆக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது (?) ஏனெறால் அவர் அவளவு நீள'தாடி' வச்சிருக்கார்
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-நவ-201911:55:17 IST Report Abuse
M.COM.N.K.K. திருவள்ளுவர் தனது படைப்பை மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில்தான் திருக்குறளை அரங்கேற்றினார் இதுதான் உண்மை. அவர் ஒரு சிவ பக்தர் ஆவார் மேலும் அவருடைய பிறப்பிடம் மதுரை அல்லது மயிலாப்பூர் சென்னை என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து அதுவும் சற்று சந்தேகமே அவரின் பிறப்பிடம் பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஏதோ ஒரு பகுதியாக இருக்கலாம். தற்போது இருக்கும் மதங்கள் தோன்றுவதற்கு முன்தான் அவர் வாழ்ந்தார் அப்போது இந்து மதம் மட்டுமே இருந்தது வேறு மதங்கள் ஏதும் கண்டிப்பாக கிடையாது இது உலகறிந்த உண்மை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மதம் இந்து மதம் மட்டுமே. இப்போது உள்ள மதங்கள் அனைத்தும் சுமார் 2000 ஆண்டுகளுக்குள் தோன்றியவைகளே. ஆகவே வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதம் மட்டுமே இருந்தது என்பது தெளிவான கருத்து இதை ஏற்றுக்கொள்ளாமல் ஏதேதோ பேசுவது முறையானதாக தெரியவில்லை. அவர் தனது திருக்குறளை அரங்கேற்றம் செய்வதற்கு முன் சிவபெருமானையும் மீனாட்சி அம்மனையும் வணங்கிவிட்டுத்தான் திருக்குறளை அரங்கேற்றம் செய்தார் அப்போது அவர் காவி உடையிலேயே இருந்திருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கலாம் அவர் எந்த உடையில் இருந்தார் என்பது முக்கியமில்லை அவர் தந்த திருக்குறள் படி நாம் அனைவரும் நடந்துகொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
selvam - Chennai,இந்தியா
06-நவ-201915:05:49 IST Report Abuse
selvamஇப்ப ஒன்னும் வெய்யில் அதிகம் இல்லையே... :)...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X