சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெயில் சாப்பாட்டுக்கு ஆசை குண்டு மிரட்டல் நபர் கைது

Added : நவ 04, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 ஜெயில் சாப்பாட்டுக்கு ஆசை குண்டு மிரட்டல் நபர் கைது

ஈரோடு: ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.சென்னை, எழும்பூரில் உள்ள, மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு, நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பல காவல் நிலையங்கள் மற்றும் ஈரோடு ரயில், பஸ் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என, மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.துாத்துக்குடியில் வடக்கு காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி காவல் நிலையம் மற்றும் ஈரோடு ரயில், பஸ் நிலையங்கள் என, பல இடங்களில், மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பின், குண்டு மிரட்டல் புரளி என, தெரிய வந்தது.இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த லிங்கராஜ், 41, இவரது மைத்துனர் சிவகுமார், 46, ஆகியோரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.

அப்போது, தொலைந்து போன லிங்கராஜின் சிம்கார்டில் இருந்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ், 31, என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. போலீசார் நேற்று, அவரை கைது செய்தனர். அவர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லிங்கராஜ் மற்றும் சிவகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

போலீசாரிடம், சந்தோஷ் அளித்துள்ள வாக்குமூலம்:எனக்கு இரு மனைவியர். இருவரும், என்னை விட்டு விட்டு, வேறு நபர்களுடன் சென்று விட்டதால், மன உளைச்சலில் இருந்தேன். சிறுமுகையில், மில் தொழிலாளியாக வேலை பார்த்தேன். வேலைப்பளு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன். சாப்பாட்டுக்கு வழியில்லை; போதையில் இருந்த போது, சிறைக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என, தோன்றியது. இதனால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
10-நவ-201919:28:44 IST Report Abuse
TamilArasan உள்ளேயே கொன்னுபோட்டுருங்க...இவனால் யாருக்கும் பயன் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
06-நவ-201916:24:16 IST Report Abuse
Natarajan Dhanasekar நல்ல யோசனையாத்தான் இருக்கு. மணியடித்தால் சோறு, வாரத்தில் அசைவம் வேறு.. .
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-நவ-201911:34:39 IST Report Abuse
A.George Alphonse கடைசியில் சிறைச்சாலை மக்களை வாழவைக்கும் விடுதியாகிவிட்டது.மைனர் சிறை சீர்திருத்த பள்ளியாகவும், சிறைச்சாலை கைதிகள் சீர்திருத்த உணவு விடுதியாகவும் ஆகிவிட்டது. அதனால் தான் all prisons are over crowded.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X