மஹா.,இழுபறியில் ஆட்சி ;தொடரும் சந்திப்பு

Updated : நவ 06, 2019 | Added : நவ 04, 2019 | கருத்துகள் (6+ 56)
Advertisement
மஹாராஷ்டிரா, ஆட்சி, இழுபறி, பட்நாவிஸ், சிவசேனா, சந்திப்பு , தொடரும் சந்திப்புகள்

மும்பை : மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து, நேற்று பேச்சு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சுழற்சி முறை இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. 'முதல்வர் பதவியை சுழற்சி முறையில் எங்களுக்கு ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில், 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், பா.ஜ., தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, தேசிய வாத காங்., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத், கட்சி நிர்வாகிகளுடன் சென்று, நேற்று, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். சந்திப்புக்குப் பின், அவர் கூறியதாவது:


முட்டுக்கட்டை


இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். அரசியல் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. ஆட்சி அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு சிவசேனா காரணம் இல்லை. சுமுகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்பது தான், எங்கள் விருப்பம். இந்த விஷயத்தில், கவர்னருக்கு, நாங்கள் ஆலோசனை கூற முடியாது. சட்ட விதிமுறைப்படி, அவர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், நேற்று டில்லி சென்று, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

பட்னவிஸ் கூறுகையில்,''பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி, விரைவில் அமையும்,'' என்றார். இந்த சந்திப்பின்போது, 'கூட்டணி அரசு அமைந்தாலும், சிவசேனாவுக்கு முதல்வர் பதவியோ, உள்துறை அமைச்சர் பதவியோ தரக் கூடாது' என, அமித் ஷா, திட்டவட்டமாக பட்னவிசிடம் கூறியதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நேற்று பேச்சு நடத்தினார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின், சரத் பவார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டிய பொறுப்பு, பா.ஜ.,வுக்கு தான் உள்ளது. அந்த கட்சிக்கு தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். தேசியவாத காங்., - காங்., கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்று தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர்.


ஆசை இல்லை


ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி, சிவசேனா எங்களிடம் கேட்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. மஹாராஷ்டிராவின் முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம், வரும், 9ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள், புதிய அரசு அமைய வேண்டும். ஆனால், ஆட்சி அமைப்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு இடையே இதுவரை எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (6+ 56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
05-நவ-201920:57:45 IST Report Abuse
kurinjikilan For Sivasena if they ally with NCP & Cong it will be death bed...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-நவ-201915:45:04 IST Report Abuse
Endrum Indian ஜனாதிபதி ஆட்சி உடனே அமுலுக்கு வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-நவ-201912:55:20 IST Report Abuse
Sriram V If sainiks walks out of alliance than bjp should never take them back. Shiv sena is ready to join hands with Dawood party and corrupt party, it is against Balasaheb idealogy
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X