'இந்தியர்களின் நலனே முக்கியம்''ஆர்செப்' அமைப்பில் இணைய மோடி மறுப்பு

Updated : நவ 06, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
மோடி,ஆர்செப்,  மக்கள் நலன், இறக்குமதி, தீர்வு, வர்த்தகம், ஒருங்கிணைப்பு

பாங்காக் : “இந்தியர்களின் நலனே எனக்கு முக்கியம். இந்தியாவின் கவலைகள், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான வழிமுறைகள் இல்லாததால், 'ஆர்செப்' எனப்படும், 16 நாடுகள் அடங்கிய, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணைய முடியாது,” என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகவும், உறுதிபடவும் தெரிவித்துள்ளார்.

'ஆசியான்' எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த ஆசியான் மாநாட்டையொட்டி, ஆர்.சி.இ.பி., எனப்படும், ஆசிய மண்டல பொருளாதார கூட்டு ஒப்பந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்கப்படாததாலும், இந்தியாவின் வர்த்தக சிக்கல்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படாத காரணத்தாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆர்.சி.இ.பி., ஒப்பந்தத்தை இந்தியர்கள் அனைவரின் நலன்களாக அளவிடுகிறேன். ஆனால் எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே எனது சொந்த மனசாட்சி என்னை இதில் சேர அனுமதிக்கவில்லை என பேசியுள்ளார்.

ஒப்பந்தம்


ஆசியான் அமைப்பில், புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய ,10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து, ஆர்செப் எனப்படும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பா உருவாக்கும் முயற்சி நடந்து வந்தது.கடந்த, 2012ல் இருந்து, இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த அமைப்பின் மூன்றாவது கூட்டம், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடந்தது.

இந்த அமைப்பில் உள்ள, 15 நாடுகள், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்கனவே தயாராக உள்ளன. பல்வேறு காரணங்களால், இதில் இணைவதற்கு, இந்தியா தயக்கம் காட்டி வந்தது. பாங்காக் கூட்டத்தின்போது, 16 நாடுகளும் இணைந்து, தாராள பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


பாதிப்பு


ஆர்செப் அமைப்பில் இணைவதால், ஆசியான் நாடுகள் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுடனான வர்த்தகத்தில், 90 சதவீத பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்க வேண்டியிருக்கும். அதேபோல், சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன், 74 சதவீத பொருட்களுக்கான வரிகளை நீக்க வேண்டியிருக்கும். இதனால், பாதிப்பு ஏற்படும் என வேளாண் மற்றும் தொழில் துறையினர் அஞ்சுகின்றனர்.

குறிப்பாக, இறக்குமதி வரி நீக்கப்படுவதால், சீன தயாரிப்புகள் அதிக அளவில் இங்கு குவிக்கப்படும் அபாயம் உள்ளதாக, இந்தத் துறையினர் கூறுகின்றனர். இந்தியா - சீனா இடையேயான வர்த்தக உறவில், நம் இறக்குமதியைவிட, ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சீனப் பொருட்கள் இங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

தற்போது, இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டால், அது சீனாவுக்கே அதிக சாதகமாக இருக்கும் என, கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகளால் தான், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, இந்தியா தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், ஆர்செப் அமைப்பின் கூட்டத்தில், 15 நாடுகளின் தலைவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தற்போது முன்வைக்கப்பட்டுள்ள, தாராள வர்த்தக ஒப்பந்தம், இந்த அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படை நோக்கத்தை உறுதி செய்வதாக இல்லை. மேலும், இந்தியாவின் நிலுவையில் உள்ள பிரச்னைகள், கவலைகளுக்கு பதிலளிப்பதாகவும் இல்லை.


வர்த்தகம்


பிராந்திய அளவில் நாடுகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு; சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு, தாராள வர்த்தகம் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. ஆர்செப் அமைப்பை உருவாக்குவதற்கான முடிவு செய்யப்பட்டதில் இருந்து, அது சிறந்த முறையில் வடிவம் பெற வேண்டும் என்பதில், இந்தியா தீவிரமாக இருந்து வந்தது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைய வேண்டும் என பாடுபட்டோம்.


எண்ணங்கள்


கடந்த, ஏழு ஆண்டுகளாக பேச்சு நடந்து வந்த நிலையில், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சூழ்நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றங்களை நாம் புறந்தள்ளி விட முடியாது. இந்த ஒப்பந்தத்துடன், இந்தியர்களின் நலனை ஒப்பிட்டு பார்க்கும்போது, சாதகமான பதில் எனக்கு கிடைக்கவில்லை. அதனால், மஹாத்மா காந்தியின் எண்ணங்கள் மற்றும் என்னுடைய மனச்சாட்சி, இந்த அமைப்பில் இணைவதற்கு அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.


பாராட்டு


அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகின்றது. அதனால், உலக மக்கள்தொகையில் பாதியைக் கொண்டுள்ள, ஆர்செப் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு, சீனா மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டது. அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தால், இந்திய விவசாயிகள், தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. பல்வேறு நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிப்பணியாமல், நாட்டின் நலனை மட்டுமே மனதில் வைத்து, பிரதமர் மோடி மிகவும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதற்கு, பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க கூட்டம் புறக்கணிப்பு


ஆசியான் அமைப்பின் கூட்டத்திற்கு இடையே, இந்தியா - ஆசியான் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில், ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள, 10 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதேபோல், அமெரிக்கா - ஆசியான் கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கவில்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சீனா அதிக அளவில் முதலீடுகளை செய்து வருகிறது. சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா ஆதிக்கம் செலுத்துவதால், ஆசியான் கூட்டத்தில், டிரம்ப் பங்கேற்கவில்லை என, கூறப்படுகிறது.

கடந்தாண்டு நடந்த கூட்டத்தில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பங்கேற்றார். ஆனால் இந்த முறை மூத்த அமைச்சர்கள் யாரையும் டிரம்ப் அனுப்பவில்லை. வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன் உள்ளிட்டோரே பங்கேற்றனர். அதனால், அமெரிக்கா - ஆசியான் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்தாண்டு கூட்டத்தை நடத்தும் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மற்ற நாடுகளின் சார்பில் பிரதிநிதிகளே பங்கேற்றனர். இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில், அமெரிக்காவில் நடக்கும் அமெரிக்கா - ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, 10 நாடுகளின் தலைவர்களுக்கு, அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். டிரம்ப் அனுப்பியுள்ள செய்தியை, ராபர்ட் ஓபிரையன் வாசித்தார். அதில், இந்த நாடுகளின் தலைவர்களுக்கு, டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.


அபே, ஆன்சூகியுடன் சந்திப்பு


தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சு அபேயை நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ராணுவம் மற்றும் பொருளாதார துறைகளில், தனது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்தி வருவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

அதைத் தொடர்ந்து, மியான்மார் அரசின் ஆலோசகரான, ஆங் சான் சூகியையும் மோடி சந்தித்தார். இந்தியா - மியான்மர் எல்லையில் பயங்கரவாதத்தை தடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், வியட்நாம் பிரதமர் குயான் ஜூவான் பாக் ஆகியோருடனும் இருதரப்பு உறவு குறித்து மோடி பேச்சு நடத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-நவ-201917:04:08 IST Report Abuse
ஆப்பு அமெரிக்காவுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் போட முயற்சி நடப்பதாக பேசுகிறார்கள். ட்ரம்பையும் கூப்பிட்டு பெரிய விருந்து வெச்சா சரியாப் போயிடும். சென்னையிலேயே வெச்சுக்கலாம். அமரிக்காவிலிருந்து தான் அப்போதய துரை மார்களுக்கு ஐஸ் கப்பல்ல வந்ததாம். 500 வருட வர்த்தகப் பாரம்பரியம் உண்டுன்னு பில்டப் குடுக்கலாம்.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
05-நவ-201917:49:43 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை குறிப்பு : இந்திக்காரர்களின் நலன் என திருத்திப் படிக்கவும்.
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
05-நவ-201920:19:28 IST Report Abuse
வல்வில் ஓரிநாக்கு தள்ள தள்ள..புலம்பு ......
Rate this:
MUM MUM - Trichy,இந்தியா
06-நவ-201900:14:59 IST Report Abuse
MUM MUMபாக்கிஸ்தான் நலம் இல்லைங்கறதுதான் ராஜவேலு "ஈ" யின் வருத்தம்.......
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
05-நவ-201917:36:36 IST Report Abuse
RAMESH he will show the well ness like try to move the Petrol and diesel under GST?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X