அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா குடும்பத்தினரின் ரூ.1,600 கோடி சொத்து முடக்கம்

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (102)
Share
Advertisement
சென்னை:சசிகலா குடும்பத்தினர், 'பினாமி' பெயரில் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017 நவம்பரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், சென்னை ஈக்காட்டுதாங்கலில்
சசிகலா, குடும்பம், சொத்து, ரூ 1,600 கோடி, முடக்கம், தினமலர், dinamalar

சென்னை:சசிகலா குடும்பத்தினர், 'பினாமி' பெயரில் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017 நவம்பரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள, ஜெயா, 'டிவி' அலுவலகம், 'மிடாஸ்' மதுபான ஆலையும் அடங்கும். ஐந்து நாட்களாக தொடர்ந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவங்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news


சசிகலா வாங்கி குவித்த 1600 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரி துறை கையகப்படுத்தி உள்ளது. சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் பினாமி பெயர்களில் 100 க்கு மேலான கம்பெனிகளை நடத்தி சொத்து சேர்த்தனர். அவர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 2 ஆண்டு முன்பு ரெய்டு நடத்தியபோது, 1500 கோடி ரூபாய் வரி மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும், பல நுாறு கோடி ரூபாய்க்கு, சொத்துகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. தொடர்ந்து, சசிகலாவின் உறவினர்கள், பினாமிகள் உட்பட பலரிடம், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்களை காண்பித்து கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சோதனை நடைபெற்ற, 187 இடங்களில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, சசிகலா குடும்பத்தினரின் போலி நிறுவனங்கள் மற்றும் சொத்துகளின் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்துள்ளனர்.


latest tamil newsஇது குறித்து, வருமானவரி அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, அனைத்து சொத்துகளை கண்டறியும் பணி முடிந்துள்ளது. இதில், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர், பினாமி பெயரில், பல்வேறு நிறுவனங்களை நடத்துவது தெரிய வந்தது. அதில், 10 நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
06-நவ-201909:41:28 IST Report Abuse
karutthu சசிகலா ஏன் இவ்வளவு ரூபாய்க்கு கொள்ளை அடிக்கணும் ? இத்தனைக்கும் பிள்ளை குட்டி கிடையாது ? யாருக்காக இவ்வளவு பணம் சேர்கிறாள் " காதற்ற ஊசியும் வராது நின் கடைவிழிக்கே " என்ற வாசகம் இவளுக்கு தெரியுமா ?
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
06-நவ-201907:15:00 IST Report Abuse
Sundararaman Iyer ஜஸ்ட் drama
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
06-நவ-201905:08:48 IST Report Abuse
meenakshisundaram முதல்லே தேர்தல் கமிசினக்கு லஞ்சம் தர முயற்சித்த தினகரனை முடக்குங்க ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X