பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுவது என்ன?

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
டில்லி , தொடர்ந்து, சென்னை,காற்று மாசு அதிகரிப்பு

சென்னை,: டில்லியை தொடர்ந்து, சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது.டில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டில்லியை போல, நாட்டில் பல்வேறு நகரங்களில், காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளது.சென்னையில், இரு தினங்களுக்கு முன், காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு, 130க்கு குறைவாக காணப்பட்டது. தற்போது, காற்றில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக, மத்திய காற்று தர கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை மாவட்டத்தில், காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு, 262 ஆக உள்ளது. இவை, வழக்கத்தை விட, அதிகமாக உள்ளது.


latest tamil news



தீபாவளி பண்டிகையின் போது கூட, சென்னையில் இந்தளவிற்கு காற்று மாசு ஏற்படவில்லை. அன்று காற்று மாசு, 128 ஆக இருந்தது என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. வாகன போக்குவரத்து மற்றும் பனிப்பொழிவு காரணமாக, காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. இவை, அபாய கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்பு குறைவு' என்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
05-நவ-201917:13:53 IST Report Abuse
Rajas சென்னையின் மாசுக்கு காரணம் பழுதான ரோட்டில் இருந்து கிளம்பும் புழுதி தான். வருடத்திற்கு நான்கு முறை ரோடு பழுது என்று பேட்ச் போட்டு காசு பார்த்து கொண்டிருந்தார்கள். இப்போது கோர்ட்டு ரோடுகளில் தரம் என்ன, எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை ரோடு போடப்படுகிறது என்று அறிக்கையாக கேட்டிருக்கிறார்கள். இதில் எல்லா திருடனும் பயந்து போயிருக்கிறான். அதனால் கடந்த ஆறு மாதங்களாக ரோடுகளில் எந்த ஒரு ஓட்டும் போடவில்லை. அதனால் புழுதி கிளம்புகிறது.
Rate this:
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
05-நவ-201916:03:44 IST Report Abuse
Harinathan Krishnanandam ஸ்டெர்லிட் போராட்டம் கொள்கை போராட்டம் சுற்று சூழல் மாசு கரணம் இல்லை என்பதை மக்களுக்கு தெள்ள தெளிவாக அறிவிக்கப்படுகிறது
Rate this:
Cancel
AR -  ( Posted via: Dinamalar Android App )
05-நவ-201912:15:14 IST Report Abuse
AR டூமீல்ஸ் சூழ்நிலைகேடுன்னு ஸ்டெர்லைட்டை போராட்டம் பண்ணி வெரட்டினீங்களே , இப்போ டெல்லி புகைக்குக் காரணமான விவசாயிகளை எதிர்த்துப் போராடுங்க பார்ப்போம் . அங்க உள்ள புகை இங்கு வரதுக்குள்ள ஒடுங்க . பின்குறிப்பு . 200 உபீஸ்க்கு குவாட்டர் கோழிப்பிரியாணி விநியோகப் பழக்கம் அங்கில்லை . சொந்த செலவுல போய்வரணும் ok?
Rate this:
Rajas - chennai,இந்தியா
05-நவ-201917:18:24 IST Report Abuse
Rajasஅந்த ஸ்டெர்லைட்டை தமிழ் நாட்டுக்கு முன் ஏன் குஜராத், மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்கள் அனுமதிக்கவில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X