எடுக்குறாங்களாம் ஆளு... என்ன 'ரேட்'னு கேளு!

Added : நவ 05, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 எடுக்குறாங்களாம் ஆளு... என்ன 'ரேட்'னு கேளு!

வீட்டு சமையலறையில் சித்ரா, 'பிஸி'யாக இருந்தாள்.உழவர் சந்தைக்கு சென்றிருந்த மித்ரா, காய்கறிகளுடன் அன்றைய நாளிதழ்களை வாங்கி வந்தாள். வராண்டா தரையில் அமர்ந்து, ஒவ்வொரு நாளிதழாக புரட்ட ஆரம்பித்தாள்.'கிரீன் டீ' கொடுத்து உபசரித்த சித்ரா, ''என்னப்பா, விசேஷமா ஏதாச்சும் செய்தி பிரசுரமாகி இருக்கா,'' என்றாள்.''ஆமாக்கா, இந்த வருஷம் உள்ளாட்சி தேர்தல் நடத்திருவாங்க போலிருக்கு. இதயதெய்வம் அலுவலகத்துல ஆளுங்கட்சி கூட்டம் நடந்திருக்கு. வேட்பாளரா யாரை நியமிச்சாலும், சங்கடப்படாம வேலை பார்க்கணும். உண்மையா ஒழைச்சா, ஈஸியா ஜெயிக்கலாம்னு சொல்லி இருக்காங்க,''''ஓ... அப்படியா...''''2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்ல, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 80 இடங்கள்ல ஜெயிச்சது. இந்த தடவை கூட்டணி கட்சிகளுக்கு பங்கு போகும். அதனால, எதிர்பார்க்குறவங்களுக்கு, 'சீட்' கெடைக்காம போயிடலாம்ங்கிறதுனால, இப்பவே, கட்சிக்காரங்கள்ட்ட சொல்லிட்டாங்க. இது சம்மந்தமா, நாளை மறுதினம் சென்னையில நடக்குற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீட்டிங்ல, வெவரமா பேசுவாங்க போலிருக்கு,''''ஆனா, எதிர்க்கட்சி கூடாரம் சத்தம் இல்லாம இருக்கே,''''அக்கா, அப்படி நினைக்காதீங்க. தி.மு.க.,வுல வார்டுக்கு, 10 பேர் கொண்ட குழு அமைச்சிருக்காங்க. மத்த கட்சிக்காரங்க பேசிக்கிட்டு இருக்காங்க. பங்கீடு முடிச்சாதானே, அடுத்த பேச்சு ஆரம்பிக்கும். அதனால, அமைதியா இருக்கற மாதிரி தெரியுது.''வழக்கமா, டிச., மாசம் இசை திருவிழா நடக்கும்; இந்த வருஷம் தேர்தல் திருவிழாவும் சேர்ந்து நடக்கப் போகுதுன்னு சொல்லு,''''மூன்று கட்டமா தேர்தல் நடந்தா, திருவிழா போல களைகட்டும். ஆனா, எதிர்க்கட்சிக்காரங்க வேட்பாளர்களை தேர்வு செய்றதுக்கு, யோசிக்க கூட 'டைம்' இல்லாத அளவுக்கு, குறுகிய அவகாசத்துக்குள்ள தேர்தல் நடவடிக்கையை முடிக்கிறதுக்கு, 'பிளான்' போட்டிருக்காங்களாம். என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம்,''''ஆளுங்கட்சிக்காரங்க கரன்சி மழையில நனையுறாங்களாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். கலெக்டர் ஆபீசுல அலுவலக உதவியாளர் வேலைக்கு ஆள் எடுக்க, கடந்த வாரம் 'இன்டர்வியூ' நடத்துனாங்க. 32 பணியிடத்துக்கு, 270 பேர் கலந்துக்கிட்டாங்க.''இதெல்லாம் கண்துடைப்புதானாம். ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கும், வைட்டமின் 'ப' கொடுத்தவங்களுக்குமே, 'அப்பாயின்மென்ட்' கொடுக்கப் போறதா பேசிக்கிறாங்க. 'இன்டர்வியூ'வுல கலந்துக்கிட்டவங்க, ரெகமென்டேஷனுக்கு ஆளுங்கட்சி பிரமுகர்களை தேடி அலையாய் அலையுறாங்க...''''அப்படியா, கார்ப்பரேஷன்லயும், 549 துப்புரவு தொழிலாளர் நியமிக்கப் போறதா, அறிவிப்பு வெளியாகி இருக்கே...''''அதுவா, கார்ப்பரேஷன் முழுக்க இது சம்பந்தமா பேசிக்கிட்டு இருக்காங்க. எல்லா ஜாதிக்காரங்களும் விண்ணப்பிக்கலாம்னு அறிவிச்சிருக்காங்க. கட்சிக்காரங்க, சங்கத்துக்காரங்க பரிந்துரைக்கு வருவாங்க, என்ன செய்றதுன்னு தெரியாம, உயரதிகாரிங்க முழிச்சிட்டு இருக்காங்க,''''ஏம்ப்பா, தகுதியானவங்களா இருந்தா, நியமிக்க வேண்டியதுதானே,'' என இழுத்தாள் சித்ரா.''அப்படியெல்லாம் முடியாதுக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கருணை அடிப்படையில வாரிசுகளுக்கு வேலை கொடுத்திருக்காங்க. இதுக்கே, 'டோஸ்' விழுந்திருக்கு. இப்ப, 549 பணியிடம் நிரப்ப போறாங்க; தலா ஒரு லட்சம்னு கணக்கிட்டா கூட, ரூ.5.49 கோடி வசூலாகும். இந்த விஷயத்த எப்படி கையாள்றதுல, உயரதிகாரிங்க யோசிச்சிட்டு இருக்காங்க,''''அதெல்லாம் சரி, ஒரு 'லேடி' இன்ஸ்பெக்டர், 'டீலிங்' பேசுன விவகாரம், 'வாட்ஸ்ஆப்'ல வைரலா பரவுதாமே,''''அதுவா, கோவை புறநகர் 'ஆல் வுமன்' போலீஸ் அதிகாரியிடம், 'கம்ப்ளைன்ட்' வந்தா, விசாரிச்சு எப்.ஐ.ஆர்., போடுறது இல்லையாம். எதிர்தரப்பை கூப்பிட்டு, கேஸ் போடாம இருக்க, 'டீலிங்' பேசுறாராம். ஒரு லேடியிடம்'டீல்' பேசுனது, 'வாட்ஸ்ஆப்ல' வைரலா பரவிட்டு இருக்கு.''அதிகாரி மேல, எஸ்.பி., --நீதிபதியிடம் ஏற்கனவே புகார் போயிருக்கு. ஆடியோவுல இருக்குற குரல், உண்மைத்தன்மைய விசாரிச்சிட்டு இருக்காங்களாம்''''ஸ்டேஷன் மாமூல் கரெக்டா போறதுனால, 'கசமுசா' சமாசாரங்களை போலீஸ்காரங்க கண்டுக்காம விடுறாங்களாமே...'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினாள் சித்ரா.''அதுவா, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, சாயங்கால நேரத்துல, ரோட்டோரத்துல நின்னு 'அழைப்பு' விடுறாங்களாம். தாஜ்மகால் கட்டுறதுக்கு காரணமா இருந்த லேடி பெயர் கொண்ட பெண்மணி தலைமை வகித்து, கலெக் ஷன் தொகையை கொடுக்குறாங்களாம்.''அதுமட்டுமில்ல, தள்ளுவண்டி கடைக்காரங்க, நடைபாதை கடைக்காரங்க, 'டாஸ்மாக்' மாமூல் அமோகமா இருக்காம். ராம்நகர் பகுதியில இருக்கிற, ஒரு ஓட்டல்ல வாரக்கடைசியில, நைட் 7:00 மணிக்கு மேல, 'டிஸ்கோ ஜாக்கி' நடக்குது. சரக்கு ஊத்திட்டு, ஆட்டம் போடுறாங்க. பொதுமக்கள் புகார் செஞ்சும், போலீஸ்காரங்க கண்டுக்காம கடந்து போறாங்களாம்,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.உக்கடம் பெரிய குளத்தில், களிங்கு பகுதியை உடைத்து, தண்ணீரை வெளியேற்றுவதாக, செய்தி ஒளிப்பரப்பாகிட்டு இருந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''அடப்பாவமே, ஒரு பக்கம் மழைநீரை சேமிக்கணும்னு பிரசாரம் செய்றாங்க. இன்னொரு பக்கம், 'ஸ்மார்ட் சிட்டி' வேலை நடந்துட்டு இருக்கு. இப்ப, குளத்துல தேங்குன தண்ணீரை வெளியேத்துறாங்களா...'' என, அங்கலாய்த்தாள்.''அக்கா, விஷயம் புரியாம புலம்பாதீங்க. ஆறு மாசத்துக்கு முன்னாடி களிங்கு பகுதியை உடைக்க முயற்சி நடந்துச்சு; தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தி, மணல் மூட்டை அடுக்குனாங்க. இப்ப, மழை பெய்றதுனால, ஆத்துல தண்ணீர் வருது,''''செல்வ சிந்தாமணி குளத்துல தேக்காம, உக்கடத்துக்கு திருப்பி விட்டாங்க. குளம் நிரம்பி, களிங்கு பகுதியில வெளியேறுச்சு. மணல் மூட்டை அடுக்குன எடத்துல, பொத்துக்கிட்டு தண்ணீர் வெளியேறும்னு நெனைச்சாங்க. கார்ப்பரேஷன் அதிகாரிங்க போயி, பொக்லைன் இயந்திரம் மூலமா மணல் கொட்டி, உடைப்பு ஏற்படாம தடுத்துட்டாங்க. இதுதான் நடந்துச்சு,''''அப்டீனா, மறுபடியும் பிரச்னை வராம இருக்க, களிங்கு பகுதியை முதல்ல புதுப்பிச்சு கட்டணும். இல்லேன்னா, கார்ப்பரேஷன் மேல சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கும்,'' என்றாள் மித்ரா.நாளிதழில் வந்திருந்த வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரத்தை பார்த்த சித்ரா, ''மார்னிங் வேலைனா, ரூ.300, நைட்ன்னா, ரூ.200 வாங்குறாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''ஆமாக்கா, கவர்மென்ட் ஆஸ்பத்திரில, ஐ.சி.யூ., - ஐ.எம்.சி.யூ., - பிரசவ வார்டு, 'சீமாங்' வார்டு, அறுவை சிகிச்சை அரங்குல வேலை செய்றதுக்கு, துப்புரவு தொழிலாளர்கள், செக்யூரிட்டிகள்ட்ட கடும் போட்டி நிலவுதாம்.''ஏன்னா, இந்த வார்டுகள்ல குறிப்பிட்ட நேரத்துல மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பாங்க. மத்த நேரத்துல அனுப்பணும்னா, 'சம்திங்' எதிர்பார்ப்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் கணிசமா வருமானம் கெடைக்கும். அதனால, டூட்டி போடுறவங்கள்ல சிலருக்கு, பணம் கொடுத்து, 'ஷிப்ட்' நேரத்தை கேட்டு வாங்குறாங்க. மார்னிங் வேலைன்னா ரூ.300, நைட்னா ரூ.200 வசூலிக்கிறாங்க. அப்ப, எவ்வளவு ரூபா வருமானம் கெடைக்கும்னு நெனைச்சு பாருங்க,''''அடக்கொடுமையே...'' என, நொந்து கொண்டாள் சித்ரா.''அதெல்லாம் சரி, புற்றுநோய் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்குன, ரூ.35 லட்சம் திரும்பி போறதுக்கு வாய்ப்பு இருக்காமே,'' என, கிளறினாள் மித்ரா.''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். பாரதியார் பல்கலைக்கு நிதி ஒதுக்கியிருக்காங்க. வர்ற, 10ம் தேதிக்குள்ள, ஆய்வறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பணும்.''பேராசிரியர்கள் சில பேரு, கருத்துரு சமர்ப்பிக்காம இருக்கறதுனால, அறிக்கை இன்னும் ரெடியாகலையாம். அவகாசத்துக்குள்ள சமர்ப்பிக்கலைன்னா, நிதி திரும்பி போயிடும்னு பேசிக்கிறாங்க,'' என்றபடி, திரும்பவும், சமைலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-நவ-201916:45:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni வராதுமித்ரா அண்ட் சித்ரா நூறுசதவீதம் நான் கரெக்ட்டா சொல்றேன் , மக்களே விரும்பாலேயே தேர்தல்களை சத்தம் தாங்களே அவனவன் காசுத்தறான் எல்லாம் போட்டுடுது டாஸ்மாக்கிற்கே என்று குப்பாயிலேந்து கோகிலாம்மா வரை புலம்பல் சத்தம் கேக்குதே மக்கள் நன்னாவே இறுக்கப்படாது என்று எண்ணினால் ப்ளீஸ் பர் பண்ணுங்க நோ தேர்தல் இனிமேல் என்று சொல்லின்னேபோறாங்க பாவம் வாங்கினகாசுக்கு வருஷத்து அரிசிமூட்டைவாங்கலாம் னு பிளான் பண்ணா கட்டிண்டவன் எல்லாத்தயையும் பிடுங்கினு போயி ட்டானாம் வாயிலேயும் வயத்துலேயும் அடிச்சுண்டு ஒப்பாரி வைக்குதுங்கப்பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X