அளவுக்கு மிஞ்சி 'ஆட்டம்'... உளவுக்கு அஞ்சி ஓட்டம்!

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019
Advertisement
''அக்கா... வீடு வரைக்கும் வர முடியுமா?. காலேஜ் புராஜக்டில் ஒரு சந்தேகம்,'' மித்ரா கேட்டதற்கு, ''ஒரு பத்து நிமிஷத்தில் வந்திடறேன்,'' பதில் சொன்ன சித்ரா, இணைப்பை துண்டித்தாள். சொன்னதுபோல, வந்த அவள், ''சொல்லு, மித்து,'' என்றதும், ''ப்பூ.. இவ்ளோதானா?'' என்ற சித்ரா, படபடவென விளக்கினாள்.''ரொம்ப தேங்க்ஸ்கா... நீங்க 'கிளியர்' பண்ணாட்டி, அதிகாரிங்க மாதிரி
 அளவுக்கு மிஞ்சி 'ஆட்டம்'... உளவுக்கு அஞ்சி ஓட்டம்!

''அக்கா... வீடு வரைக்கும் வர முடியுமா?. காலேஜ் புராஜக்டில் ஒரு சந்தேகம்,'' மித்ரா கேட்டதற்கு, ''ஒரு பத்து நிமிஷத்தில் வந்திடறேன்,'' பதில் சொன்ன சித்ரா, இணைப்பை துண்டித்தாள். சொன்னதுபோல, வந்த அவள், ''சொல்லு, மித்து,'' என்றதும், ''ப்பூ.. இவ்ளோதானா?'' என்ற சித்ரா, படபடவென விளக்கினாள்.''ரொம்ப தேங்க்ஸ்கா...

நீங்க 'கிளியர்' பண்ணாட்டி, அதிகாரிங்க மாதிரி நடுங்கிட்டேதான் காலேஜ் போகணும்,'' என்றாள் மித்ரா.''என்னடி, ஆரம்பத்திலேயே 'கேட்' போடறே...''''புதிர் இல்லைங்க்கா.. சொல்றேன். முதலிபாளையம் 'சிட்கோவில்' டெங்கு ஆய்வுக்கு அதிகாரிகள் போன போது, வட மாநில தொழிலாளிகள்கிட்ட 'குட்கா' இருந்ததை கண்டுபிடிச்சிட்டாங்க. எப்டியோ அட்ரஸ் கண்டுபிடிச்சு போனா, அந்த வீட்டுக்கதவை தாழ் போட்டுட்டு, திறக்க மாட்டேன்னு, ரகளை பண்ணாங்களாம்,''''அப்புறம் என்னாச்சுடி?''

''எப்டியோ சிரமப்பட்டு திறந்து பார்த்தப்ப, வீட்டுக்குள்ள மூட்டை மூட்டையா 'பான்மசாலா' பதுக்கி வச்சது தெரிய வந்திருக்கு இதனால, ஆவேசப்பட்ட இன்ஸ்., ஒருத்தர், 'ஏண்டா... இந்த வேலையெல்லாம் பண்றீங்கன்னு?' கையை ஓங்கினாராம்,''

''அப்போ, திடீர்னு ஒரு தொழிலாளி, இன்ஸ்.,ன் ரெண்டு கையையும் முறுக்கி பிடிச்சுட்டு, விடவேயில்லையாம். அவரும், 'கைய விடுடா'ன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டாராம். அப்புறமா, கஷ்டப்பட்டு, இன்ஸை இழுத்தாங்களாம்,''''அதனாலதான், 'டெங்கு' ஆய்வுக்கு போறப்ப, 10 வட மாநில தொழிலாளிகள் இருந்தா, நீங்க பேசமா வந்திருங்கன்னு, அதிகாரிகளுக்கு போலீஸ்காரங்களே 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க''''என்னடி, இது கொடுமையா இருக்கு. அப்ப ஏதுவுமே பண்ணக்கூடாதா? திருப்பூரில் வரவர இவங்க தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு. சரி, மித்து... 'சிட்கோ' மேட்டர் இன்னொன்னு கேளு,'' ''சொல்லுங்க்கா...''

''டெங்கு பரப்பும் கொசு உற்பத்திக்கு காரணமா இருந்தவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், வருவாய்த்துறையினர் பைன் போட்டுட்டாங்க. சிலர் மட்டும் கொஞ்சம் பணம் கட்டினாங்க. மத்தவங்க, கட்டாம, எம்.பி., - எம்.எல்.ஏ.,-னு சிபாரிசுக்கு போயிருக்காங்க. ஆனா, எல்லாரும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இது தெரிஞ்சதால், 'பைன்' கட்டுங்கன்னு, அதிகாரிங்க கடுமையா நெருக்கடி கொடுத்திட்டு இருக்காங்களாம்,''

''ஓ... அப்டீங்களா,'' என ஆச்சரியப்பட்ட அவள், ''சமூக பாதுகாப்பு திட்டத்தில், 30 லட்சம் லவட்டிய விவகாரம் என்னாச்சுங்க்கா?'' கேள்வி கேட்டாள் மித்ரா.''நோயாளர் நலச்சங்க நிதி, 30 லட்சம் ரூபா இருப்புல இருந்துச்சு. அங்கிருந்த ஆர்.ஐ.,யும், சில ஊழியர்களும், போலியாக மூணு பேரை 'செட்டப்' பண்ணி செக் போட்டு பணத்த எடுத்துட்டாங்களாம்,''''பணத்த கொடுத்துட்டா, சிம்பிளா முடிச்சுக்கலாம்னு, அதிகாரிகள் தரப்புல பேசினாங்களாம். ஆனா, விவகாரம் வெளியே தெரிஞ்சதால, போலீசுல புகார் கொடுத்திருக்காங்க. இனி, போலீஸ் ஸ்டைலில் விசாரிச்சாத்தான் உண்மை வெளி வரும் போல,'' என்றாள் மித்ரா.

''சாட்டையை சுத்தும் சின்ன அதிகாரியை பார்த்து, போலீஸ்காரங்க எல்லாரும் பீதியில் இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''என்னக்கா நீங்க சொல்லறது, ஆச்சரியமாக இருக்கு, 'சிட்டி'க்குள்ள, அப்படி ஒருத்தரு இருக்காரா,'' என்று ஆச்சரியமாக கேட்டாள் மித்ரா.

''ஆமாண்டி, மித்து, உளவுத்துறைக்கு சமீபத்தில் மாற்றலாகி வந்த அவர், ரொம்ப கரெக்டா இருக்கார். அவர் வந்த பின்னாடிதான், சூதாட்ட கிளப் மற்றும் கஞ்சா விஷயத்தில், 'கிடுக்கிப்பிடி' போட்டதால், பல 'கிளப்' மூடியாச்சு,''''அதுமட்டுமின்றி, இனிமேல், எதாவது கிளப் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கை செய்தாராம். அவரின் தடாலடி நடவடிக்கையால், 'வாங்கி பழகிய'ஆட்கள், நொந்து போய்ட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா... பரவாயில்லையே. இவரை மாதிரியே எல்லாரும் இருந்துட்டாங்கன்னா, பிரச்னையே இல்லை. ஆனால், கமிஷனர் ஆபீஸ் இருக்கிற ஸ்டேஷனில், கட்ட பஞ்சாயத்து ஓேஹான்னு நடக்குதாம்,''''அட.... கொடுமையே!''''முழு விவரத்தையும் சொல்றேன் கேளுங்க. பள்ளி சிறுமி ஒருவருக்கு, தோலில் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக, பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர், 5 ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு, மருந்து கொடுத்து இருக்காரு. ஆனால், அந்த மருந்து தடவியதில், சிறுமிக்கு மேலும் பிரச்னை ஆயிடுச்சு,''

''இதனால, அதிர்ச்சி அடைஞ்ச சிறுமியின், பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தாங்க. ஆனா, எப்.ஐ.ஆர்., போடாம, கட்டப்பஞ்சாயத்து செய்றதில குறியாஇருக்காங்களாம். அதுக்கு, பெற்றோர் ஒத்துக்காததால், விஷயம் கசிஞ்சிருச்சு. இதனால, வேறு வழியின்றி, எப்.ஐ.ஆர்., போட்டாங்களாம்,''''நியாயமான பிரச்னைக்கு கூட, பணத்தை எதிர்பார்க்கிற போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மத்தவங்க திருந்துவாங்க. மித்து, கட்டப்பஞ்சாயத்துனு சொன்ன உடனே, இன்னொரு மேட்டர் நினைவுக்கு வருது''''என்ன... மேட்டருங்க்கா!''

''தீபாவளிக்கு, 'சிட்டி' போலீஸ்காரங்க சிலர், பட்டாசு, ஸ்வீட்டுன்னு, 'செம' கலெக்ஷன் பண்ணிட்டாங்களாம். அதிலும், அரிசி கடை வீதியிலுள்ள ஒரு ஸ்வீட் கடைக்கு, டிராபிக் போலீஸ்காரர் போய், 50 பாக்கெட் ஸ்வீட் கேட்டிருக்கிறார்,''

''இதைக்கேட்ட கடைக்காரருக்கு தலை சுத்திடுச்சாம். ஏன்னா, அம்பது பாக்ஸ்க்கு, 30 ஆயிரம் ரூபாய் ஆகுது. வேணுமின்னா, உங்களுக்கு ஒண்ணு தர்றேன்'னு, சொன்னாராம். உடனே, அவரு 'கப்-சிப்'னு நடையை கட்டிட்டாராம்,'' என்றாள் சித்ரா.

''இவங்க திருந்தவே மாட்டாங்க்கா,'' என்ற மித்ரா, ''கவர்மென்ட் ஸ்டாப்ஸ், சொத்து குவிக்கிறாங்க, தெரியுங்களா?''''ம்...ஹூம். இது எங்கடி?''''காளைக்கு பேர் போன ஊருல உள்ள கவர்மென்ட் டாக்டர், போலீஸ், ைஹவேஸ் இப்படி பல துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், நிலம், வீட்டுமனைகளை அவசரம், அவசரமாக வாங்கியிருக்காங்களாம். இதில, வேடிக்கை என்னன்னா, புதுசா வந்திருக்கிற அதிகாரியும், 'ஒரு பெரிய்ய... நோட்டு' மதிப்புக்கு பங்களா தேடறாராம்,''

''இதையெல்லாம், ஐ.டி., மற்றும் 'விஜிலன்ஸ்' அதிகாரிகள் கண்காணித்தால், உண்மை என்னன்னு தெரியும்,'' என்று மித்ரா சொன்னதும், ''அட, அதே ஊர் மேட்டர் சொல்றேன் கேளு...''''அந்த ஊர் போலீசார், எப்பவுமே இருட்டுக்குள் நின்னுதான், 'வெகிள் செக்கப்' செய்வாங்களாம். அப்பதான், 'மீட்டர்' போடறதுக்கு வசதியா இருக்கும். இப்படித்தான், ரெண்டு நாளைக்கு முன்னாடி, அகஸ்திய லிங்கம்பாளையத்தில் ஸ்பீடா வந்த லாரியை நிறுத்த சொல்லவும், டிரைவரும் 'சடன் பிரேக்' போட்டாராம்,''

''இதனால, லாரிக்கு பின்னாடி, மொபட்டில் வந்திட்டிருந்த பூ வியாபாரி, மோதி இறந்துட்டாராம். இதுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கோணும்னு, பூ வியாபாரியோட சொந்தக்காரங்க, கோர்ட்டில் கேஸ் போட முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என சித்ரா சொன்ன போது, கோவிலுக்கு சென்றிருந்த மித்ராவின் அம்மா, வீட்டுக்குள் வந்து, ''இந்தா.. ரெண்டு பேரும், கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவ மஞ்சள், குங்குமம் எடுத்துக்கோங்க,'' என, பிரசாத தட்டை கொடுத்தார்.

இருவரும், பவ்யமாக எடுத்து நெற்றியில் வைத்தனர். அப்போது, மித்ரா, ''அக்கா, கந்த சஷ்டி நாளில், அதிகாரி கோவில் பக்கமே வரலையாம்,'' என புதிர்போட்டாள்.''எந்த கோவிலில் மித்து?''''நம்ம ஈஸ்வரன் கோவிலில்தான். இரண்டு நாள் சிறப்பா நடந்த கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் எதுவுமே செய்யலையாம். இதனால், அதிகளவில் வந்த பக்தர்கள் வரிசையில நிக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டுட்டாங்க,''

''இதை தெரிஞ்சுகிட்ட, சில பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து, வரிசையை சரி செஞ்சாங்களாம். இப்படி, முக்கியமான நாளில் கூட, கோவிலுக்கு வராத அதிகாரியை என்னன்னு சொல்றதுன்னு, ஊழியர்களும், பக்தர்களும் கேள்வி கேட்கிறாங்க.''''ஆனா, இதைவிட கொடுமை என்னன்னு கேட்டா, இதனை பக்கத்திலேயே இருக்கிற உயரதிகாரியும் கண்டுக்கவேயில்லையாம்,'' என்ற மித்ராவின் மொபைல் போன் ஒலித்தது. எடுத்து பார்த்து, ''மம்மி... உங்களுக்கதான் போன். 'சீனிவாசன்' சித்தப்பா, லைனில் இருக்கிறார்,'' என்றதும், அவளது அம்மா போனை வாங்கி பேச ஆரம்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X