பொது செய்தி

தமிழ்நாடு

'திருவள்ளுவர் நாத்திகர் அல்ல': மாபா

Added : நவ 05, 2019 | கருத்துகள் (54)
Advertisement
'திருவள்ளுவர் நாத்திகர் அல்ல': மாபா

''திருவள்ளுவர், சைவ அல்லது வைணவ துறவியாக இருக்கலாமே தவிர, நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் சங்கத்தில், கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின், அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியதாவது:பிரிட்டிஷ் அரசு தான், திருவள்ளுவருக்கு முதல் வடிவம் கொடுத்தது.

அனைவருக்கும் பொதுவான வள்ளுவரை, அவரவர் விருப்பப்படி பார்ப்பதில் தவறில்லை. திருவள்ளுவர், சைவ அல்லது வைணவ துறவியாக இருக்கலாமே தவிர, நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை.ஓராண்டில், கீழடியில் உலகத்தரமிக்க அருங்காட்சியகம், 12.20 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 10 ஆயிரம் பொருட்கள் உலகத்தர அருங்காட்சியகத்தில்வைக்கப்படும்.

மதுரையில் கொந்தகை, மணலுார், அகரம் கிராமங்களில், அகழாய்வு நடக்கும். கூடுதலாக, மூன்று இடங்களில் அகழாய்வு நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். ஆதிச்சநல்லுாரில், ஏழாம் கட்ட ஆய்வு நடத்த உள்ளோம். மத்திய அரசு செய்த, முதல் இருகட்ட அகழாய்வு அறிக்கை, தமிழாக்கம் செய்து வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



உலகப் பொதுமறையை தந்த திருவள்ளுவர் நாத்திகர் இல்லை. அவரை யாராகவும் அவரவர் மதம் சார்ந்து உருவகப்படுத்திக் கொள்ளலாம். லார்ட் எல்லீஸ் வெளியிட்ட திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயங்கள் மூலம் அவரைப் பற்றிய ஆய்வு செய்யப்படும் என, மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு வந்த, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-நவ-201910:42:50 IST Report Abuse
Nallavan Nallavan திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று கூட கூறப்பட்டு வந்தது... அவருக்கு மதச்சாயம் பூசக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
05-நவ-201920:49:32 IST Report Abuse
.Dr.A.Joseph வள்ளுவர் தமிழை மட்டும் நேசித்த கொள்கை பிடிப்பாளர். உங்களை போல கட்சி விட்டு கட்சி தாவுபவர் அல்ல. அதிகாரத்தில் இருப்பதால் எதையும் பேசாதீர்கள் .கேப்டனை சொல்ல வேண்டும் உங்களை எல்லாம் வளர்த்து விட்டதற்கு .
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
05-நவ-201920:49:14 IST Report Abuse
M.COM.N.K.K. திருவள்ளுவர் சென்னை அல்லது மதுரையாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களின் கருத்து ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறோம்.அவருடைய பிறப்பிடம் அநேகமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஏதோ ஒரு பகுதியாகத்தான் இருக்க அதிக வாய்ப்புக்கள்.இது என்றாவது ஒருநாள் கண்டிப்பாக தெரியவரும். இதை எதைவைத்து சொல்கிறோம் என்றால்.இந்த மாவட்டங்களில் அதிகமான குழந்தைகளுக்கு வள்ளுவன் என்ற பெயரை வைத்து மகிழ்கிறார்கள் அதைவைத்துதான் அவரின் உண்மையான பிறப்பிடம் தஞ்சை மாவட்டமாக இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.அவர் ஒரு சிவ பக்தர் அவர் ஒரு சைவ குலத்தை சார்ந்தவர்தான் அதில் சந்தேகமே இல்லை.சைவ குலம் என்பது சைவம் ஆகும் சைவ உணவை மட்டுமே உண்பவர்.மதுரையில் அவர் காவி உடலிலே தான் மதுரை பொற்றாமரை குளத்தில் தனது திருக்குறளை அரங்கேற்றினார் இதுதான் உண்மை இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.அவர் ஒரு தெய்வப்புலவர் ஆவார்.
Rate this:
Share this comment
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
14-நவ-201903:25:55 IST Report Abuse
.Dr.A.Josephவரலாற்று ஆவணங்கள் ஏதாவது இருக்கிறதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X