பொது செய்தி

தமிழ்நாடு

‛‛நான் ஓட்டல் சர்வரா'': எரிந்து விழுந்தாரா கலெக்டர்

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (53)
Advertisement
‛‛நான் ஓட்டல் சர்வரா'': எரிந்து விழுந்தாரா கலெக்டர்

இந்த செய்தியை கேட்க

கரூர்: ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தியவரை கரூர் மாவட்ட கலெக்டர் திட்டியதாக ஆடியோ வெளியானது. அது தனது குரல் அல்ல என கலெக்டர் அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள செம்பியநத்தம் கிராமத்தில் பாதுகாப்பின்றி திறந்து இருந்த ஆழ்துளை கிணற்றை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கலெக்டருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தொலைபேசி உரையாடலில், ஆழ்துளை மூட வேண்டும் என அந்த இளைஞர் முறையிட, கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று தெரிவிக்குமாறு கூறுகிறார். அதற்கு, அவர்களிடம் பலமுறை தெரிவித்தும் மூடவில்லை என அந்த இளைஞர் கூறினார்.
கோபமடைந்த கலெக்டர், ‛‛கலெக்டர் என்றால் நீங்கள் கூப்பிடும் போதெல்லாம் வர முடியுமா. நான் என்ன சரவண பவன் சர்வரா. ராஸ்கல் என திட்டியதாக கூறப்படுகிறது.

கரூர், செம்பியநத்தத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்பகுதியில் திறந்திருக்கும் ஆழ்துளை கிணற்றை மூடக்கோரி கலெக்டர் அன்பழகனுக்கு போன் செய்துள்ளார். உரையாடலில் பேசிய கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்குமாறு கூறுகிறார். BDOவிடம் கூறியும் நடவடிக்கை இல்லை என இளைஞர் கூற, கோபமடைந்த கலெக்டர், உங்களுக்கு அக்கறை இருந்தா நேர்ல போய் சொல்லுங்க... சரவண பவன் சர்வர்ன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா கலெக்டரெல்லாம்... போன் பன்னி சொல்றதுக்கு... ராஸ்கல் என திட்டிவிட்டு கட் செய்கிறார். இந்த ஆடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.


மறுப்பு:


இது குறித்து விளக்கமளித்த கலெக்டர் அன்பழகன், செம்பியநத்தம் இளைஞரிடம் நான் பேசவும் இல்லை, அந்த ஆடியோவில் இருப்பது என் குரலும் இல்லை, என மறுப்பு தெரிவித்துள்ளார்.




Advertisement


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
08-நவ-201911:05:41 IST Report Abuse
வால்டர் யார் அந்த இளைஞர்?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
06-நவ-201919:33:51 IST Report Abuse
 nicolethomson கலெக்டரின் பேச்சை பதிவு செய்து வெளியிட தெரிந்த நபருக்கு அந்த கிணற்றை மூட தெரியாதது தான் அசிங்கத்தின் உச்சம் , இவனை போன்றோர் இருப்பதால் தான் நலிந்து வருகிறோம்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
06-நவ-201918:05:03 IST Report Abuse
Jaya Ram ஒரு மாவட்ட கலெக்டரிடம் போன் பேசும் அளவிற்கு சக்திபடைத்த அந்த நபர் ஏன் அந்த குழாயினை மூடியிருக்கக்கூடாது, இது அரசு அதிகாரிகளின் வேலை என்கிறார்கள் சிலர் நல்லது ஏற்றுக்கொள்வோம் அரசு போட்ட போர்க்கலை அவர்கள் மூடவைக்கலாம் தனியார் நிலங்களில் போடப்பட்டபோர்க்கலை யார் மூடனும் நாம் தானே இல்லையெனில் அந்த வீட்டினையோ , அல்லது வயலையோ ஜப்தி செய்ய அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கலாமா , கொடுத்தால் அவர்கள் ஏழை கல் ,விவசாயிகள் என்று ஒரு கும்பல் கிளம்பும் அதிகாரிகளை அதிகாரம் செய்தால் இப்படித்தான் தேவையில்லாத பிரச்சினைகள் வரும் எனவே மக்களும் , அதிகாரிகளும் இணைந்து செயல்படுங்கள் நல்லது நடக்கும் , பசு வருகிறது என்பதற்கும் , மாடு வருகிறது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா அதுதான் இங்கே நடைமுறைப்படுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X