‛‛நான் ஓட்டல் சர்வரா: எரிந்து விழுந்தாரா கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛‛நான் ஓட்டல் சர்வரா'': எரிந்து விழுந்தாரா கலெக்டர்

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (53)
Share
கரூர்: ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தியவரை கரூர் மாவட்ட கலெக்டர் திட்டியதாக ஆடியோ வெளியானது. அது தனது குரல் அல்ல என கலெக்டர் அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள செம்பியநத்தம் கிராமத்தில் பாதுகாப்பின்றி திறந்து இருந்த ஆழ்துளை கிணற்றை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கலெக்டருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தொலைபேசி
‛‛நான் ஓட்டல் சர்வரா'': எரிந்து விழுந்தாரா கலெக்டர்

இந்த செய்தியை கேட்க

கரூர்: ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தியவரை கரூர் மாவட்ட கலெக்டர் திட்டியதாக ஆடியோ வெளியானது. அது தனது குரல் அல்ல என கலெக்டர் அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள செம்பியநத்தம் கிராமத்தில் பாதுகாப்பின்றி திறந்து இருந்த ஆழ்துளை கிணற்றை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கலெக்டருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தொலைபேசி உரையாடலில், ஆழ்துளை மூட வேண்டும் என அந்த இளைஞர் முறையிட, கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று தெரிவிக்குமாறு கூறுகிறார். அதற்கு, அவர்களிடம் பலமுறை தெரிவித்தும் மூடவில்லை என அந்த இளைஞர் கூறினார்.
கோபமடைந்த கலெக்டர், ‛‛கலெக்டர் என்றால் நீங்கள் கூப்பிடும் போதெல்லாம் வர முடியுமா. நான் என்ன சரவண பவன் சர்வரா. ராஸ்கல் என திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.


மறுப்பு:


இது குறித்து விளக்கமளித்த கலெக்டர் அன்பழகன், செம்பியநத்தம் இளைஞரிடம் நான் பேசவும் இல்லை, அந்த ஆடியோவில் இருப்பது என் குரலும் இல்லை, என மறுப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X