பசும் பாலில் தங்கம்: பாஜ., தலைவர் சர்ச்சை

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (60)
Share
Advertisement
பர்த்வான்: தொப்புளில் சூரியஒளியை போன்று ஜொலிக்கும் தங்கத்தை பசு உற்பத்தி செய்வதால் தான், அதன் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் ஒரு கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு காரணமாக மக்கள்
Cow, Navel, Milk, Gold, BJP, Chief, Bengal, மேற்குவங்கம், பாஜக, பாஜ, பசு, பால், தங்கம்,

இந்த செய்தியை கேட்க

பர்த்வான்: தொப்புளில் சூரியஒளியை போன்று ஜொலிக்கும் தங்கத்தை பசு உற்பத்தி செய்வதால் தான், அதன் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் ஒரு கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு காரணமாக மக்கள் தற்கொலை செய்வதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் வழங்கப்படுவதாக கூறினார்.
இந்நிலையில், தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பர்த்வானில் செய்தியாளர்களிடம் திலீப் கோஷ் கூறியதாவது: இந்திய பசுக்களில் ஒரு சிறப்பியல்பு உள்ளது. அதன் தொப்புளில் சூரியஒளி போன்று மின்னும் தங்கம் உற்பத்தியாகிறது. அதன் காரணமாக தான் பசுவின் பால் தங்கம் கலந்து மஞ்சள் நிறமாக இருக்கிறது.

மேற்கு வங்காள பிஜேபி தலைவர் திலிப் கோஷ் பேசுறத கேளுங்க: பசு நம்ம அம்மா மாதிரி. மாட்டுக்கறி சாப்டுறது மகா பாவம். ஆனா வெளிநாட்ல இருந்து வந்த பசுவ அம்மா மாதிரி நினைக்க அவசியம் இல்ல. பசும்பால் ஏன் மஞ்ச கலர்ல இருக்கு, தெரியுமா? அதுல தங்கம் கலந்திருக்கு, அதான் காரணம். அறிவாளிகள் மாட்டுக்கறி சாப்டுறாங்க. அவங்க நாய்க்கறியும் சாப்ட்டா உடம்புக்கு நல்லது. ஆனா ரோட்ல இல்ல, வீட்டுக்குள்ள சாப்டட்டும்.


latest tamil news


மாடு தாயை போன்றது. அதன் பாலை உட்கொள்வதால் தான் உயிருடன் இருக்கிறோம். அப்படிப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக சாப்பிடுவது கடுமையான குற்றம். அந்த அறிவுஜீவிகள் நாய் இறைச்சியையும் சாப்பிடுவார்களா. நாட்டு மாடுகள் தான் எங்கள் தாய், வெளிநாட்டு மாடுகள் அல்ல. இவ்வாறு திலீப் கோஷ் கூறினார். இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
06-நவ-201902:33:49 IST Report Abuse
Vetri Vel மாட்டு மூத்திரம் சில்வர் நிறத்தில் வருது..வெள்ளி உருக்கலாம்... சரியான நாட்டு மாட்டு பிறவி தான்யா நீ...
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
05-நவ-201922:12:39 IST Report Abuse
TamilArasan Mysuru priests accuse Bishop of sexual misconduct, corruption, shoot letter to Pope Francis A group of 37 priests in Mysuru have accused the Bishop of Mysuru Diocese of sexual misconduct, corruption and other criminal offences. The group has now written a letter to Pope Francis in the Vatican.
Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
07-நவ-201900:10:58 IST Report Abuse
Vetri Velசம்பந்தம் இல்லாத எழுத்து... கல்விக்கண் திறந்தவர் உன் கண்ணை அடைத்தது ஏன்..?...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-நவ-201919:25:15 IST Report Abuse
தமிழவேல் ஒருதடவை ஒண்ணுக்கிடைக்க ஒண்ண சொன்னா அது சர்ச்சையைக் கிளப்பி விட்டுட்டதா சொல்லலாம். அடிக்கடி நடந்தால் பயித்தியம்னு சொல்லணும். சென்றமாதம் பிராக்கியா வைப் பற்றி செய்தியில் எதிர்க்கட்சி சாபம் விட்டுட்டதா சர்சையைக் கிளம்பினதாவந்தது., இன்னும் பலரும் இப்படித்தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை கூறுவதாக வந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X