கட்கரிக்கு 2 மணி நேரம் போதும்; பிரச்னை 'ஓவர்': சிவசேனா

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (17)
Advertisement
Gadkari,two hours,கட்கரி,Nitin Gadkari,Maharashtra,Shiv Sena,Mohan Bhagwat, Kishore Tiwari,RSS,chief, தினமலர், dinamalar

மும்பை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தால், 2 மணி நேரத்தில் பிரச்னையை தீர்த்து விடுவார் என ஆர்.எஸ்.எஸ்.,க்கு சிவசேனா கடிதம் எழுதி உள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. 'முதல்வர் பதவியை சுழற்சி முறையில் எங்களுக்கு ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில், 50:50 இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், பா.ஜ., தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் கிஷோர் திவாரி கூறியதாவது: மஹாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. பா.ஜ., தலைவர்களால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இதற்கு தீர்வு காண, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தால், அவர் 2 மணி நேரத்தில் பிரச்னையை தீர்த்து வைத்து விடுவார் எனக் குறிப்பிட்டுள்ளேன். அவரால் மட்டுமே இதற்கு சுமூக தீர்வு காண முடியும். ஆர்.எஸ்.எஸ்., தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும். இதில் தங்களின் மவுனமும், மக்களை கவலை கொள்ள செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
06-நவ-201901:53:54 IST Report Abuse
B.s. Pillai BJP was always sticking to SS, htough SS was using muscle power every time. But everything has an ending. Even in Mumbai Mayor election, BJP subdued in the larger interest of maintaining the State government for its full 5 years. This relaxation shown by BJP may be the cause for SS now sticking to its demand of CM post and 50% share in ministerial berths, though SS knows very well that its demands are totally unreasonable.It will ring the death bell of SS, if SS allies with Congress and NCP for forming government.
Rate this:
Share this comment
Cancel
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
05-நவ-201923:34:27 IST Report Abuse
Suresh Gurusamy BJP எதிர் கட்சியில் அமர்ந்து சிவசேனா காங்கிரஸ் ,சரத்பவார் உடன் இணைந்து ஆட்சி அமைய ஏற்பாடு செய்யுங்கள். ஒரே கல்லில் பிஜேபி க்கு ஏகப்பட்ட நன்மைகள்.இப்போதுதைரியமான முடிவு பிஜேபி எடுத்தால் இன்னும் ஒரு வருடத்தில் எதிர் கட்சியே இல்லாத ஆட்சி அமைக்க முடியும்.சிவசேனா ஆட்டம் அடங்கி விடும்...
Rate this:
Share this comment
Cancel
Sundar - Tirunelveli,இந்தியா
05-நவ-201922:40:04 IST Report Abuse
Sundar ஒரு சங்கி கதறி கருத்து போடுது - இன்னொன்னு I second this opinion னு சிங்கி அடிக்குது - இவனுங்க காமெடிக்கு அளவே இல்ல போ
Rate this:
Share this comment
VSK - CARY,யூ.எஸ்.ஏ
06-நவ-201900:40:58 IST Report Abuse
VSKஅப்போ நீ என்ன லுங்கியா ?...
Rate this:
Share this comment
Rohin - jk ,இந்தியா
06-நவ-201910:29:13 IST Report Abuse
RohinVSK அவர்களே, அவன் ஒரு பக்கி என்கிற பங்கி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X