சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா லாவசா?

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: தற்போது தேர்தல் கமிஷனராக உள்ள அசோக் லாவசா, மத்திய மின்துறையில் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்க உதவினாரா என்பது குறித்து விசாரிக்கும்படி, மின்துறையைச் சேர்ந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ரகசிய கடிதம்:தற்போது தேர்தல் கமிஷனராக உள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ்.,
தேர்தல் ஆணையர்,அசோக் லாவசா,அதிகார துஷ்பிரயோகம், செய்தாரா,தினமலர், dinamalar

புதுடில்லி: தற்போது தேர்தல் கமிஷனராக உள்ள அசோக் லாவசா, மத்திய மின்துறையில் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்க உதவினாரா என்பது குறித்து விசாரிக்கும்படி, மின்துறையைச் சேர்ந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ரகசிய கடிதம்:


தற்போது தேர்தல் கமிஷனராக உள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அசோக் லாவசா, மத்திய அரசின் மின்துறையில், 2009 - 2013 வரை, நான்கு ஆண்டுகள், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மத்திய மின்துறை அமைச்சகம், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கு சமீபத்தில் ஒரு ரகசிய கடிதம் அனுப்பியுள்ளது. அதில், லாவசா மின்துறையில் பணியாற்றியபோது, தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பது உள்ளிட்ட உதவிகளை செய்தாரா என்பது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், சில நிறுவனங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news





வருமான வரித் துறை:


மத்திய மின்துறை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனங்களில், லாவசாவின் மனைவி நோவல் லாவசா இயக்குனராக உள்ளார். இந்தாண்டு லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தபோது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது, பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரித்த, தேர்தல் ஆணையம், அந்தப் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் நடத்திய விசாரணையின் போது, லாவசா மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்ததாக செய்திகள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து, லாவசாவின் மனைவி நோவல், மகன் ஆபிர் ஆகியோர் நடத்தும் நிறுவனங்களின் கணக்குகளை, வருமான வரித் துறை ஆய்வு செய்யத் துவங்கியது. விசாரணைக்கு ஆஜராகும்படி, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல், டாக்டராக உள்ள லாவசாவின் சகோதரி சகுந்தலா லாவசாவுக்கும், வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
06-நவ-201914:30:27 IST Report Abuse
Balaji பிரதமரையும் பாஜக தலைவரையும் எதிர்த்ததற்கு பரிசு கொடுக்க படுகிறது போல.....
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-நவ-201910:38:02 IST Report Abuse
pradeesh parthasarathy பழிவாங்கல் ஆரம்பம் ....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்இத்தாலி கட்சிக்கு ஆதரவாக செயல்படாத சேஷன் படாதபாடுபட்டது போலவா?...
Rate this:
Cancel
06-நவ-201910:15:30 IST Report Abuse
பச்சையப்பன் ஆஹா ஆஹா!! மீண்டும் ஒரு பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X