பொது செய்தி

இந்தியா

தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கு மறுப்பு: பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிகிறது

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடிக்கு, வர்த்தகர்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.'ஆர்செப்' எனப்படும், 16 நாடுகள் அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இந்தியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே
வர்த்தக ஒப்பந்தம்,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடிக்கு, வர்த்தகர்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

'ஆர்செப்' எனப்படும், 16 நாடுகள் அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இந்தியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தகம் நடக்கும். ஒப்பந்ததில் கையெழுத்திடுவதன் மூலம், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் சந்தையில், இந்திய பொருட்களுக்கு கிராக்கி ஏற்படும் என்றாலும், உள்நாட்டு தொழில் உற்பத்தியும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் மோடி, திட்டவட்டமாக மறுத்து விட்டார்.


latest tamil news



இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பாராட்டு குவியத் துவங்கியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான, குஜராத்தின் அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை காரணமாக, நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் கூட்டுறவு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சிங் கூறுகையில்,''பிரதமர் மோடி எடுத்த உறுதியான முடிவு, விவசாயிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. தாராள வர்த்தக ஒப்பந்தத்தால், சீனாவுக்கு தான் அதிக பலன் கிடைக்கும்; நமக்கு எந்த பயனும் இல்லை,'' என்றார்.

இதுபோல், மேலும் பல வர்த்தக அமைப்புகளும், விவசாய சங்கங்களும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
06-நவ-201914:39:51 IST Report Abuse
Balaji இந்த உறுதியான நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மை...... இதற்காகவே இந்த அரசுக்கு நன்றிகளை தெரிவிக்கலாம்....... இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டு இருந்தால் சீனாவின் ஆதிக்கம் நமது சந்தைகளில் சாதாரணமாக நமது பொருளாதாரத்தை அசைத்து பார்த்துவிடும்.......
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-நவ-201911:08:46 IST Report Abuse
pradeesh parthasarathy பத்து நாட்களுக்கு முன்பு பியூஸ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடும்... இல்லாவிட்டால் இந்தியா தனிமை படுத்தவிடும் என்று கூறினார்...கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன... குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சோனியா இதற்க்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று சொன்னார், ராகுலும் இதற்க்கு எதிராக கடுமையான குற்றசாட்டை கூறினார் ...வேறு வழியில்லாமல் மோடி எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அடிபணிந்தார் ...
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
06-நவ-201912:21:56 IST Report Abuse
HSR..ஹவ் ஆர் யூ...
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
06-நவ-201912:23:07 IST Report Abuse
Vaanambaadi...ஹா ஹா......சூப்பர் வொய்......
Rate this:
Balaji - Khaithan,குவைத்
06-நவ-201914:42:43 IST Report Abuse
Balajiஅவங்க இந்த ஒப்பந்தத்துல கையெழுத்திடவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருந்துவிட்டு இப்போ இல்லை என்றதும் இப்படி சொல்ல வந்துடீங்க போல....... குழந்தையை கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல............
Rate this:
Cancel
sripa - muscat,ஓமன்
06-நவ-201910:20:27 IST Report Abuse
sripa சபாஷ் மோடி ஜி. உங்களை வெறுத்தவர்களையும் உங்கள் மகத்துவத்தை புரிந்து கொண்டு பாராட்டுவது பார்க்கும் பொழுது நெஞ்சம் மகிழிச்சியில் துள்ளி குதிக்கிறது.. தொடரட்டும் உங்கள் சீரிய பனி. ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X