தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கு மறுப்பு: பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கு மறுப்பு: பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிகிறது

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (35)
Share
புதுடில்லி: தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடிக்கு, வர்த்தகர்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.'ஆர்செப்' எனப்படும், 16 நாடுகள் அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இந்தியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே
வர்த்தக ஒப்பந்தம்,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடிக்கு, வர்த்தகர்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

'ஆர்செப்' எனப்படும், 16 நாடுகள் அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இந்தியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தகம் நடக்கும். ஒப்பந்ததில் கையெழுத்திடுவதன் மூலம், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் சந்தையில், இந்திய பொருட்களுக்கு கிராக்கி ஏற்படும் என்றாலும், உள்நாட்டு தொழில் உற்பத்தியும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் மோடி, திட்டவட்டமாக மறுத்து விட்டார்.


latest tamil news



இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பாராட்டு குவியத் துவங்கியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான, குஜராத்தின் அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை காரணமாக, நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் கூட்டுறவு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சிங் கூறுகையில்,''பிரதமர் மோடி எடுத்த உறுதியான முடிவு, விவசாயிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. தாராள வர்த்தக ஒப்பந்தத்தால், சீனாவுக்கு தான் அதிக பலன் கிடைக்கும்; நமக்கு எந்த பயனும் இல்லை,'' என்றார்.

இதுபோல், மேலும் பல வர்த்தக அமைப்புகளும், விவசாய சங்கங்களும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X