இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் 2 வயது சிறுமி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'சில் 2 வயது சிறுமி

Updated : நவ 05, 2019 | Added : நவ 05, 2019 | கருத்துகள் (1)
Share
ஆத்துார் : சேலம் மாவட்டம், உலிபுரத்தைச் சேர்ந்த, 2 வயது சிறுமி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில், 'அற்புத குழந்தை'யாக இடம்பெற்றுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி, உலிபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளாபானு, 29; அரசு டாக்டர். இவரது கணவர் நவ்சாத் அலி, 32; பிசியோதெரபி டாக்டர். இவர்களது மகள் சஹானாஆப்ரீன், 2. இச்சிறுமி, பொது அறிவு கேள்விக்கு, சரியாக
'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'சில் 2 வயது சிறுமி

ஆத்துார் : சேலம் மாவட்டம், உலிபுரத்தைச் சேர்ந்த, 2 வயது சிறுமி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில், 'அற்புத குழந்தை'யாக இடம்பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி, உலிபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளாபானு, 29; அரசு டாக்டர். இவரது கணவர் நவ்சாத் அலி, 32; பிசியோதெரபி டாக்டர். இவர்களது மகள் சஹானாஆப்ரீன், 2. இச்சிறுமி, பொது அறிவு கேள்விக்கு, சரியாக பதிலளிக்கிறார்.இ ந்தியாவில் உள்ள மாநில தலைநகர்கள், தமிழக மாவட்டங்கள், தேசிய பறவை, மரம், விலங்கு, திருக்குறள், தமிழ், ஆங்கில மாதம், வாரம், ஆங்கில எழுத்து, ஒன்று முதல், 100 வரை எண்கள் என, எது கேட்டாலும் பதிலளிக்கிறார்.

மேலும், 100க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய தலைவர்கள், பிரதமர், முதல்வர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் புகைப்படத்தைச் பார்த்து சொல்வதை, மக்கள் வியப்பாக பார்க்கின்றனர். பள்ளிக்கு செல்லாத நிலையில், 2 வயதில் இத்தனை தகவல்களை தெரிந்து வைத்திருக்கும் சிறுமிக்கு, ஜூலை, 26ல், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பினர், 'கூர்மையான அறிவுடைய அற்புத குழந்தை' எனும் சான்றிதழை வழங்கியுள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் கூறியதாவது: ஒரு வயது முதல், நாளிதழ்களில் வெளியாகும் படங்களை பார்த்து, யார் இவர் என, கேள்வி கேட்டதால், சொல்லிக் கொடுத்தோம். மறுநாள், அந்த படம் வந்தால், அவரது பெயரை கூறியது வியப்பாக இருந்தது. 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தினர், 34 தலைப்புகளில் கேள்வி எழுப்பியபோது, அனைத்துக்கும் பதிலளித்ததால், சாதனை புத்தகத்தில், 'அற்புத குழந்தை' என, இடம் பெற்றுள்ளார். முதல்வர், இ.பி.எஸ்., தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டினர். இவ்வாறு, அவர்கள் கூறினர். சிறுமியை பாராட்ட, 97895 - 20062 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X