பொது செய்தி

இந்தியா

நாட்டின் தங்கத்தின் தேவை 32% குறைந்துள்ளது

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தங்கத்தின் தேவை, கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 32 சதவீதம் சரிந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.மறுசுழற்சி:இது குறித்து, அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகளவில், தங்கத்தை இறக்குமதி செய்வதில், சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில்,
தங்கம்,gold,குறைந்துள்ளது,32%

புதுடில்லி: இந்தியாவில் தங்கத்தின் தேவை, கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 32 சதவீதம் சரிந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.


மறுசுழற்சி:


இது குறித்து, அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகளவில், தங்கத்தை இறக்குமதி செய்வதில், சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் தங்கத்துக்கான தேவை, 32 சதவீதம் சரிந்து, 123.9 டன்னாக குறைந்துள்ளது. மேலும், தங்கம் இறக்குமதி, 66 சதவீதம் குறைந்து, 80.5 டன்னாக ஆகியுள்ளது.

முன்னர் இறக்குமதி செய்த தங்கம், பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றின் மூலம், தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நாட்டின் மொத்த தங்கம் தேவை, 496.11 டன் ஆக சரிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில், 523.9 டன்னாக இருந்தது. இதேபோல் நடப்பு ஆண்டின், முதல் ஒன்பது மாதங்களில் மொத்த இறக்குமதி, 502.9 டன்னாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில், 587.3 டன்னாக இருந்தது.


latest tamil news




நுகர்வோர்:


தங்கத்தின் விலை, 20 சதவீதம் வரை அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை நுகர்வோர் நம்பிக்கையை குறைத்தது ஆகிய இரண்டு காரணங்களால், இந்தியாவின் தங்கம் தேவை குறைந்துவிட்டது. இவ்வாறு உலக தங்கம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
06-நவ-201916:16:46 IST Report Abuse
Balaji தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து ஒருவித விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது..... இதன் தாக்கமாக கூட இருக்கலாம்...... மற்றும் தற்போதைய மந்தநிலையில் நுகர்வு திறன் குறைந்து தான் காணப்படுகிறது....... இதுவும் ஒருவித காரணம் தான்........
Rate this:
Cancel
06-நவ-201913:34:36 IST Report Abuse
நக்கல் குருவிகள் ...ல் தங்கத்தை வைத்து கொண்டுவந்தால் எவன் வாங்குவான்...
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
06-நவ-201912:54:49 IST Report Abuse
K.P  SARATHI பணம் மதிழப்பு நடவடிக்கையால் தங்கம் விலை குறையும் என்று நம்பினோம் ஆனால் மாறாக ஏறிவிட்டது. மேலும் ETF தங்கம் இன்வெஸ்ட்மென்ட் நிறுத்தவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X