பொது செய்தி

தமிழ்நாடு

சகலவல்ல நாயகரே! கமல்-60

Added : நவ 06, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஐந்து வயதில் சினிமாவில் அறிமுகமான கமலஹாசன், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார். அவரது கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார். நவ., 7ல் சினிமா துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954 நவ., 7ல் ராமநாதபுரம் மாவட்டம்,
சகலவல்ல நாயகரே! கமல்-60

ஐந்து வயதில் சினிமாவில் அறிமுகமான கமலஹாசன், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார். அவரது கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார். நவ., 7ல் சினிமா துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954 நவ., 7ல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். ஐந்து வயதில் 'களத்துார் கண்ணம்மா'வில் அறிமுகமானார்.


'ஹீரோ' அறிமுகம்:

1974ல் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் 'ஹீரோ'வாக அறிமுகமானார். தமிழில் 1975ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் தனி 'ஹீரோ'வாக ஒப்பந்தமானார். 'சென்சார்' பிரச்னையால் இப்படம் வெளியாக தாமதமானது. இதனால், ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்., 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் 'ஹீரோ'வாக கமலின் முதல் தமிழ் படம். அதே ஆண்டு வெளியான பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படம் திருப்புமுனை ஏற்படுத்தியது. 1976, ஜூன் 25ல் தான் 'உணர்ச்சிகள்' 'ரிலீஸ்' ஆனது.

ஆரம்ப காலங்களில் காதல் இளவரசனாக அவதாரம் எடுத்தார். சொல்லத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும், அவள் ஒரு தொடர்கதை, மன்மத லீலை, மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நீயா, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை போன்ற படங்களில் முத்திரை பதித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமானவர், அவ்வை சண்முகியில் பெண், இந்தியன் படத்தில் முதியவர் என பல்வேறு 'கெட்-அப்'களில் தோன்றி மக்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தார்.


கவர்ந்த படங்கள்:

மூன்றாம்பிறை, புன்னகை மன்னன், நாயகன், மைக்கேல் மதன காமராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், அவ்வை சண்முகி, இந்தியன், தெனாலி, தசாவதாரம், விஸ்வரூபம், பாபநாசம் உட்பட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. அனைத்து மொழிகளிலும் சேர்த்து 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


இளையராஜா உடன்...

இளையராஜா இசையில் அதிக படங்களில் நடித்துள்ளார் கமல். இருவரும் இணைந்து பல 'ஹிட்' பாடல்களை கொடுத்துள்ளனர்.


அரசியல் களத்தில்...

மதுரையில் 2018 பிப்., 21ல் நடந்த விழாவில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை தொடங்கினார். 2019 லோக்சபா தேர்தல் (ஓட்டு சதவீதம் 3.72) மற்றும் தமிழகத்தில் நடந்த 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இவரது கட்சி போட்டியிட்டது.


பாலசந்தர் பாசம்:

பாலசந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார் கமல்.


24 பட ஜோடி:

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர்.


தயாரிப்பாளர்:

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 27 படங்களை தயாரித்துள்ளார். முதல் படம் ராஜபார்வை (1981), கடைசி படம் கடாரம் கொண்டான் (2019).


இயக்கிய படங்கள்:

அவ்வை சண்முகியின் இந்தி பதிப்பான சாச்சி 420, ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் -2 உட்பட படங்களை இயக்கியுள்ளார்.


நடன இயக்குநர்:

சிவாஜியின் 'சவாலே சமாளி', எம்.ஜி.ஆரின் 'சங்கே முழங்கு', ஜெய்சங்கரின் 'நுாற்றுக்கு நுாறு', எஸ்.பி.முத்துராமனின் 'காசி யாத்திரை' உட்பட பல படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


'செவாலியே' புகழ்:

தமிழக அரசின் கலைமாமணி விருது - 1980
பத்மஸ்ரீ - 1990
கவுரவ டாக்டர் பட்டம் - 2005
பத்ம பூஷன் - 2014
பிரான்சு நாட்டின் செவாலியே விருது - 2016
தமிழக அரசின் திரைப்பட விருது - ஒன்பது முறை
ஆந்திராவின் நந்தி விருது - மூன்று முறை


நான்கு தேசிய விருது:

களத்துார் கண்ணம்மா - 1960
மூன்றாம் பிறை - 1983
நாயகன் - 1988
இந்தியன் - 1996


19 'பிலிம்பேர்'

ஐந்து மொழிகளில் 19 முறை 'பிலிம்பேர்' விருது பெற்று உள்ளார். இனி 'பிலிம்பேர்' விருது தனக்கு வேண்டாம், புதியவர்களுக்கு வழங்கும்படி 2000ல் கேட்டுக்கொண்டார்.


'பிக்பாஸ்':

சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தனியார் 'டிவி' சேனலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை மூன்று முறை தொகுத்து வழங்கினார்.


'தசாவதாரம்'

தசாவதாரம் (2008) படத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட பத்து வேடங்களில் நடித்தவர்.


'ஆஸ்கர்' கனவு

'ஆஸ்கர்' விருதுக்கு இந்தியாவில் இருந்து இவரது படங்களான நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம், சுவாதி முத்யம் (தெலுங்கு), சாகர் (இந்தி) ஆகிய படங்கள் அனுப்பப்பட்டது. விருதுக்கு தேர்வாகவில்லை. இவருக்கு 'ஆஸ்கர்' எட்டாக்கனியாக உள்ளது.


நினைவோ ஒரு பறவை...

சொந்த குரலில் 90க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கமல். இதில் சில...

'ஞாயிறு ஒளி மழையில்' - அந்தரங்கம்
'நினைவோ ஒரு பறவை' - சிகப்பு ரோஜாக்கள்
'தென்பாண்டி சீமையிலே' - நாயகன்
'சுந்தரி நீயும்' - மைக்கேல் மதன காமராஜன்
'கண்மனி அன்போடு' - குணா
'இஞ்சி இடுப்பழகி' - தேவர் மகன்

'கலக்கபோவது யாரு' - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINESH - CHENNAI,இந்தியா
07-நவ-201910:46:46 IST Report Abuse
DINESH 1975ல் கதாநாயகனாக அறிமுகமாகி ஏழே வருடங்களில் சகலகலா வல்லவன் படம் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அந்த முன்னணி இடத்தை ஏறக்குறைய 35 வருடங்கள் தக்க வைத்தார். வியத்தகு சாதனைதான்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-நவ-201900:35:22 IST Report Abuse
Rajagopal நான் உயர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, வயதான எம் ஜி ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் தொப்பையை வைத்துக் கொண்டு, பேத்தி வயதுப் பெண்களுடன் டூயட் பாடி மரங்களை சுற்றி வந்து ஆடியது எப்போதுடா இது முடியும் என்ற சலிப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் கமல் தோன்றினார். வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், அவரது கலை திறன் பல விதங்களில் பிரதிபலித்தது. அவர் பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் செய்தவர். கர்நாடக சங்கீதம் ஓரளவுக்கு முறையாகப் பயின்றவர். கராத்தே பயிற்சி பெற்றவர். மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர். அவர் நடித்த பெங்காலிப் படத்தைப் பார்த்துப் பெருமிதம் அடைந்தேன். கூட இருந்த வங்காளிகள் இந்த நடிகர் யார் என்று வியந்தார்கள். தெலுங்கில் கொடி கட்டிப் பரந்த முதல் தமிழ் நடிகர் அவர்தான். இந்தியில் அவர் நல்ல படங்களில் நடித்தாலும் அவரது உயரமின்மை, வளைந்த கால்கள், தமிழ் வாடை அடித்த இந்தி போன்றவை அவருக்குப் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. அப்போது இந்திப் பட உலகில் உயரமான, பஞ்சாபி ஆண்கள் ஆதிக்கம் செய்த காலம். ஆனால் கமல் எல்லோராலும் மதிக்கப் பட்டார். நல்ல பேச்சாளர். மிகவும் புத்திசாலியான மனிதர். நிறைய படித்தவர் (தானாக). பல மொழிகள் தெரிந்தவர். ஐந்து வருடங்கள் கூட நிலைத்து நிற்க முடியாதத் திரைப்பட உலகில் அறுபது வருடங்கள் தங்கி தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறார். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற தாகம் அவருக்கு இன்றும் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்திருந்தால் உலகம் முழுதும் அவர் பெயர் பெற்றிருப்பார். ஆனால் இந்தியாவில் இருந்தும் தன்னை ஒரு பிரம்மாண்டமான கலைஞராக வளர்த்திருக்கிறார். அவரைப் போல இன்னொருவர் வருவது அரிது. அவர் உண்மையிலேயே ஒரு சகல கலா வல்லவர். அவர் அரசியலுக்கு வராமல், வயதான காலத்தில் நடிப்பதை விட்டு, திரை கதை, இயக்கம் போன்ற துறைகளில் சாதிக்க விரும்பியதை சாதித்திருக்கலாம். ஆனால் அது அவரது இஷ்டம். கமல் என்ற நடிகரை யாராலும் குறை சொல்ல இயலாது. அந்த அளவுக்கு அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவர் நூறாண்டுகள் வாழ்ந்து தமிழ் திரையுலகுக்கு மேலும் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
06-நவ-201917:13:43 IST Report Abuse
Arasu கமல் பாடிய அன்பே சிவம் பாடல் ..புகழ் பெற்ற பாடல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X