அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்சம்

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (122)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தஞ்சை : தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.


தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், காவித்துண்டு மற்றும் ருத்ராட்ச மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ஆன்மிக அரசியலுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். உலக பொதுமறை குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
உலக நாடுகள் பலவும் திருவள்ளுவருக்கு கோயில் கட்டுவதுடன், தங்கள் நாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றன. பிரதமர் மோடியும் வெளிநாடுகளுக்கு சென்று பேசும் போது கூட திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றுகிறார் என்றார். தொடர்ந்து இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சையில் ஊர்வலமும் நடத்தப்பட்டது.


அர்ஜூன் சம்பத் கைது


இதற்கிடையே தஞ்சை அருகே உடையாளூரில் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumoolar - chennai,இந்தியா
07-நவ-201921:44:29 IST Report Abuse
Thirumoolar முதலில் அர்ஜூன் சம்பத்துக்கு தலை வணங்குகிறேன் அவர் ஆன்மிகவாதி மற்றும் கட்சியின் தலைவன் இவரை போன்றவர்களால் தான் இன்று இந்து மதம் பற்றிய புரிதல் அனைவருக்கும் ஏற்படுகிறது. ருத்ராட்சம் யார் வேண்டுமானாலும் அணியலாம் சைவம் வைணவம் என்று இல்லை ......தேவி பாகவதம் சிவா புராணம் படித்தால் புரிந்து கொள்ளலாம். அப்படி என்றால் வேற்று மதத்தவர் அணிந்து கொள்ளலாமா என்றால் ...கொள்ளலாம் அவருக்கு சிவன் மீதோ சக்தி மீதோ விஷ்ணு மீதோ இல்லை மொத்தமாக கடவுள் மீதோ நம்பிக்கை இருந்தால் ...முதலில் ருத்ராட்சத்தை நம்ப வேண்டும் பிறகு ஜபம் தியானம் செய்ய வேண்டும் அப்பொழுதே ருத்ராட்சத்தை புரிந்து கொள்ள முடியும் ......நம் நாட்டில் உள்ள மற்றும் இதுவரை(200-300 வருடங்களுக்கு முன்பு) இருந்த அனைத்து பெரியவர்களும் ஆன்மிகர்களும் இந்து மதத்தை சேர்ந்தவரே வீரமாமுனிவரை தவிர (அவை GU POPE ) இங்கிலாந்து நாட்டிலிருந்து இங்கு வந்து வேற்று மதத்தை ஆங்கிலேயர் பேரை மாற்றி மக்களை ஏமாற்றி பரப்பினார்கள் .........
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
06-நவ-201921:10:45 IST Report Abuse
Cheran Perumal இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த திருவள்ளுவர் படத்திலிருந்து ருத்திராட்சத்தையும் விபூதியையும் நீக்கியது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை? இவர் என்ன பெரியார் சிலை மீதா காவித்துண்டு போர்த்தினார்? திருவள்ளுவரை நாத்திகராக்கிய கும்பலுக்கு காவல்துறை ஏவல்துறை ஆகிவிட்டதா?
Rate this:
Share this comment
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
06-நவ-201920:07:34 IST Report Abuse
K.P  SARATHI எந்த மதத்தின் பின்னணி இல்லாமல் ஒரு மனிதன் பிறக்க முடியுமா, மேலும் 2000 வருடங்களுக்கு முன்னாள் தமிழ் புலமை பெற்ற இவர் எப்படி இந்து மதம் சேராதவர் ஆவர். அகர முதல எழுத்தல்லாம் ஆதிபகவன் முத்தேற்ற உலகு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X