முரசொலி இடம் பஞ்சமி நிலமா?: ஸ்டாலின் மீண்டும் சவால்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி இடம் பஞ்சமி நிலமா?: ஸ்டாலின் மீண்டும் சவால்

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (70)
Share

இந்த செய்தியை கேட்க

சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் என பலர் புகார் தெரிவித்துவந்த நிலையில், அது பஞ்சமி நிலம் இல்லை என்பதை உரிய நேரத்தில் ஆவணங்களுடன் நிரூபிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.



latest tamil news


சமீபத்தில் வெளியான அசுரன் படம் பார்த்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், டுவிட்டரில் பஞ்சமி நில மீட்பு குறித்து பாராட்டு தெரிவித்தார். உடனே, 'சென்னையில், முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள, பஞ்சமி நிலத்தை திருப்பி ஒப்படைப்பாரா' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.
மேலும், இது தொடர்பாக, பா.ஜ., மாநிலச் செயலர் ஸ்ரீநிவாசன், தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் துணை தலைவர் முருகனிடம் புகார் அளித்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நில ஆவணங்களுடன், வரும், நவ.,19ம் தேதி, டில்லியில் உள்ள கமிஷனரகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலருக்கு, கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீநிவாசனும் அன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


பாமக தலைவர் ஜி.கே.மணியும், முரசொலி அலுவலக மூலப்பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களையும், ஸ்டாலின் வெளியிட மறுப்பது ஏன், எனக் கேள்வி எழுப்பியிருந்தார். முதல்வர் பழனிசாமியும், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆவணங்களுடன் உண்மையை நிரூபிப்பேன். இந்த உறுதியே வீண்பழி சுமத்துவோருக்கு இறுதி பதிலாக அமையும். அரசியல் லாபத்திற்காக பழிசுமத்துவதை நான் மட்டுமல்ல எந்த தொண்டரும் ஏற்று கொள்ளமாட்டார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அவ்வப்போது ஆவணங்களை வெளியிடுவோம், நிரூபிப்போம் என ஸ்டாலின் கூறி வந்தாலும், இதுவரை நிரூபிக்கவில்லை. இந்த முறையாவது பேசியபடி ஆவணங்களை வெளியிட்டு நிரூபிப்பாரா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X