11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., தகுதி நீக்க மனு நிராகரிப்பு

Updated : நவ 08, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஆம்ஆத்மி, 11 எம்.எல்,ஏ , நிராகரிப்பு, ராம்நாத் கோவிந்த்

புதுடில்லி: ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உட்பட, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், பதவி வகிக்கின்றனர்.'இவர்களை, ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரத்தில், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, வழக்கறிஞர் விவேக் கார்க் என்பவர், 2017ல், ஜனாதிபதியிடம் மனு அளித்தார்.

இந்த மனு தொடர்பாக, தேர்தல் கமிஷனின் கருத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டார்.அதற்கு, தேர்தல் கமிஷன் அளித்த பதில் விபரம்:இந்த விவகாரத்தில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாவட்ட பேரிடம் மேலாண்மை ஆணையம், மாதச் சம்பளமோ, படிகளோ வழங்கவில்லை. அவர்களுக்கு போக்குவரத்து வசதி, அலுவலகம், உதவியாளர்கள், தொலைபேசி, குடியிருப்பு போன்ற வசதிகளும் வழங்கப்படவில்லை.

எனவே, இதை ஆதாயம் தரும் பதவியாகக் கருத முடியாது. எனவே, இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு, தேர்தல் கமிஷன் பதில் அளித்தது. இதையடுத்து, ஆம் ஆத்மியைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-நவ-201917:01:53 IST Report Abuse
Endrum Indian இது சொல்றதுக்கு ரெண்டு வருஷமா???உங்களிடம் எல் கே ஜி குழந்தைகளுக்கு 1+1=2 சொல்லிகொடுங்க என்றால் அதற்கு 5 வருடம் எடுத்துக்கொள்வீர்களா
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
07-நவ-201913:19:20 IST Report Abuse
suresh kumar இந்த தள்ளுபடிக்குப் பிறகு, முன்தேதியிட்டு அனைத்து பணப் பலன்களும் படிகளும் வழங்கப் படாதிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-நவ-201906:32:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆன்டி இந்தியன் கோவிந்துன்னு கழுவி ஊத்த ஒரு கூட்டம் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X