பொது செய்தி

இந்தியா

உஷார்! அயோத்தி வழக்கில் தீர்ப்பு ; தீவிர பாதுகாப்பு

Updated : நவ 08, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
அயோத்தி, தீர்ப்பு, ஹிந்துக்கள், பாதுகாப்பு, சுப்ரீம்கோர்ட், நடவடிக்கை, சர்ச்சை நிலம்

லக்னோ : அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அங்கு அடுத்த வாரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளை, மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 17ல் ஓய்வு பெறுகிறார். அதனால், அதற்கு முன் தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும், 13ல் தீர்ப்பு வெளியிடப்படலாம் என, செய்திகள் தெரிவிக்கின்றன.


புனித நீராடுவர்


இந்நிலையில், வட மாநிலங்களில், வரும், 12ம் தேதி, கார்த்திகை பவுர்ணமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் புனித நீர்நிலைகளில் நீராடுவது வழக்கம். அயோத்தியில் பாயும் சரயு நதியிலும், ஹிந்துக்கள் அதிக அளவில் புனித நீராடுவர். கடந்த ஆண்டு நடந்த விழாவின்போது, எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ளதால், இந்தாண்டு, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே, 18ம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் அதிக அளவில் குவியக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிடுவதை தடுக்க, சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஹிந்து மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன், மாநில அரசும் பேச்சு நடத்திஉள்ளது. அமைதியை காக்க, அனைத்து தரப்பினரும் உதவிட வேண்டும் என, மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மும்பையில் பாதுகாப்பு


அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத வன்முறை நடந்துள்ள பகுதிகளில், தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தீர்ப்பு வெளியான பின், கொண்டாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு கூட்டங்கள் நடத்துவதற்கும், மும்பை போலீஸ் தடை விதித்து உள்ளது.


முஸ்லிம் அமைப்பு கோரிக்கை


முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான, ஜமாத் உலமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், நிலத்தின் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்துள்ளது. வரலாற்று உண்மைகள், ஆதாரங்கள் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம்.

சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களும், அனைத்து குடிமக்களும் அமைதி காத்து, மத ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
07-நவ-201916:00:02 IST Report Abuse
oce அந்த பெருந்தன்மையை நம்ம இந்து சகோதரர்களே நினைவில் வைத்துக் கொண்டு கொண்டு இடித்த மசூதியை கட்டி தர சொல்லுங்களேன் .......காரைக்குடி கனி. உங்கள் கேள்வியை பாபர் சந்ததிகளிடம் கேளுங்கள்.
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
07-நவ-201915:49:39 IST Report Abuse
Rahim Gani சமூக வலைத்தளங்களை விட ஒரு சில பத்திரிகைகளின் கருத்து பகுதிகளில் தான் அதிகமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதியப்படுகின்றன எனவே இவற்றை கவனமாக சேமிக்க வேண்டும் இவை அனைத்தும் தான் சிறந்த ஆதாரங்கள்.....
Rate this:
Cancel
Arul - thanjavur,இந்தியா
07-நவ-201911:17:27 IST Report Abuse
Arul வாட்ஸ் அப் இல் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடுவது கண்காணிக்கப் படுவது நல்லதே. அதைவிட சிறப்பான ஒன்று....நாளை முதல், ஒரு மாத காலத்திற்கு, இதுபோன்ற இணையவழி செய்தித்தாள்கள் (தினமலர், தினத்தந்தி...இன்னும் பிற) தினசரி,வார,மாத இணையதள நாளிதழ்கள், ஆண்டிராய்டு செயலிகள், இன்னும் அனைத்து விதாமான சமூக ஊடகங்களிலும் கமெண்ட்ஸ் பகுதி நீக்கப்பட வேண்டும். தொலைகாட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், ஊர்வலங்களை தடை விதிக்கப்பட வேண்டும். பள்ளி,கல்லூரி,அலுவலகம் எதிரிலும், அயோத்தி தொடர்பான தீர்ப்பு குறித்து ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறுவது, விவாதம் செய்வது தடை செய்யப்பட வேண்டும். தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், நடுநிலையாக வந்தாலும், வன்முறை என்பது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடைபெற கூடாது. தீர்ப்பில் யாருக்காவது திருப்தி இல்லையென்றால், ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் என்ன நடைமுறைகள் இருக்கிறதோ அதை மட்டும் பின்பற்ற வேண்டும். மத ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ நாட்டில் இனி எந்த வன்முறையும் நடைபெறக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X