காற்று மாசு வழக்கு; அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Updated : நவ 08, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (3+ 41)
Advertisement
காற்று மாசு, டில்லி, சுப்மீர் கோர்ட், கண்டனம், பாதிப்பு,பயிர் கழிவு

புதுடில்லி : 'டில்லி மற்றும் தலைநகர் மண்டல பகுதிகளில், காற்று மாசு ஏற்படக் காரணமான, கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டில்லியில், காற்று மாசு காரணமாக, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நகர் முழுவதும், புகை மண்டலமாக காணப்படுகிறது. டில்லியின் அண்டை மாநிலங்களான, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால், டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, டில்லி, பஞ்சாப், ஹரியானா மாநில தலைமை செயலர்கள் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாவது: விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் யாரும் தப்பிக்க முடியாது. இந்த ஆண்டும், பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதை முன்னரே தடுக்க, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


கேள்விக்குறி


காற்று மாசால், டில்லி மற்றும் தலைநகர் மண்டல பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு, அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். காற்று மாசால் மக்கள் இறப்பதை, அரசுகள் அனுமதிக்கின்றனவா; 100 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்துக்கு, நாடு அழைத்து செல்லப்படுகிறதா? பயிர் கழிவுகள் எரிப்பதை தடுக்கும் பணியில், பஞ்சாப் மாநில அரசு தோல்வியடைந்து விட்டது. காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிட்டால், எதற்கு அரசை நடத்துகிறீர்கள்.

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசுகள், ஆட்சியில் இருக்க எந்த தகுதியும் இல்லை. இவர்களுக்கு, மக்களின் நலனில் அக்கறையில்லை; ஏழைகளைப் பற்றி கவலையுமில்லை. இது, மிகவும் துரதிருஷ்டவசமானது. பயிர் கழிவுகளை எரிக்காமல் இருப்பதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; அவற்றை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சூழலை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசு மற்றும் அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க, பஞ்சாப் மாநில அரசிடம் பணம் இல்லையா? உங்களிடம் பணம் இல்லை என்றால், எங்களிடம் கூறுங்கள். பயிர் கழிவு எரிப்பதை தடுப்பதற்கான நிதியை, நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.


விளக்கம்


பஞ்சாப் மாநில தலைமை செயலர், உரிய நடவடிக்கை எடுப்பதுடன், விளக்கம் அளிக்க வேண்டும். கடமையை செய்யத் தவறினால், அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டி வரும் என, எச்சரிக்கிறோம், ஹரியானாவில், நான்கு மாவட்டங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை தடுக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, மாநில தலைமை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-நவ-201914:13:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் விவசாயத்தில் முன்பு சுயற்சி முறை இருந்தது, விளைச்சலில் தானியங்களை நாம் உண்டால், மாடுகள் அந்த கழிவுகளை உண்ணும், அது சாணமாக, இயற்கை உரமாக மண்ணில் போடப்படும். இப்போது டிராக்டர் கொண்டு உழுது மாட்டை ஒழித்துவிட்டோம். அந்த விவசாய கழிவுகளை என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பழையபடி மாடு வளர்ப்பு ஆரம்பிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
07-நவ-201910:29:41 IST Report Abuse
GMM உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் சரியே. விளைந்த பயிரை விலை கொடுத்து வாங்க வியாபாரிகள் இருக்கும் போது இலவசமாக கரும்பு சக்கை, வைக்கோல் போன்றவற்றை எடுத்து செல்ல வியாபாரிகள் முன்வருவர். அரசு முயற்சி செய்யவில்லை. வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது மக்கள் பிரதிநிதிகள். நிதி ஒதுக்கீடு இன்றி அதிகாரிகள் செயல்பட முடியாது. காற்று மாசு கட்டுப்பாட்டு இல்லாமைக்கு மந்திரி விளக்கம் தேவை. மாசு எல்லை மீறி இருந்தால் வேட்பாளர்கள் நீக்கம் செய்ய ECI க்கு அதிகாரம் வேண்டும். லத்தி பயிற்சி பெற்ற காவலரிடம் மட்டும். ஓட்டு உரிமை நல்லவருக்கும் மற்றவருக்கும். தடுக்க பட வேண்டிய குற்ற பின்னணி வேட்பாளர்கள் தேர்வை தடுக்க முடிய வில்லை.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
07-நவ-201904:07:01 IST Report Abuse
blocked user டெல்லிக்கு இரண்டு பிரச்சினை. ஒன்று ஏராளமாக இருக்கும் 2 ஸ்டிரோக் ரக மோட்டார் பைக்குகள். இரண்டாவது சாலையில் கிடைக்கும் தூசி வாகனங்களால் மேலே தூக்கி வீசப்படுவது. இது இரண்டும் கெடுதல்களில் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்க்கு ஆடு ஈவன் கிடையாது. கேஜ்ரிவால் போன்றோர் இவற்றை பிரச்சினையாக எடுக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X