அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆவண ஆதாரத்துடன் நிரூபிப்போம்; பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலின் பதில்

Updated : நவ 08, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (59+ 70)
Advertisement
ஆவண ஆதாரத்துடன் நிரூபிப்போம்;  பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலின் பதில்

சென்னை : 'சென்னையில், முரசொலி நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் அல்ல என்பதை, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன் நிரூபிப்போம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'முரசொலி நிலம், பஞ்சமி நிலம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டார். அது, பச்சைப் பொய் என, பட்டா நகலின் ஆதாரத்துடன், மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும், அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் அன்புமணியும், அரசியலை விட்டு விலக தயாரா என, அறைகூவல் விடுத்திருந்தோம்; அதன்பின், அங்கிருந்து பதிலில்லை.

மீண்டும், 'மூலப் பத்திரத்தை காட்டவில்லை' என, ஒரு அறிக்கை தந்தார். அது, பஞ்சமி நிலமல்ல என, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல், நிரூபிப்போம். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும், இறுதியான பதிலாய் அமையும் என, கருதுகிறேன். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


அரசியல் வியாபாரி!

முன்னாள் அமைச்சரும், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான தங்கம் தென்னரசு அறிக்கை: ஸ்டாலின் அனுபவித்த, மிசா கொடுமையை கொச்சைப்படுத்தி, அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார். முதலில், பா.ஜ.,வில் இணைந்து, அடுத்த ஓராண்டில், தே.மு.தி.க.,விற்கு தாவி, தன்னை எம்.எல்.ஏ., ஆக்கிய விஜயகாந்திற்கு துரோகமிழைத்தவர், பாண்டியராஜன். தியாகம் என்றால், என்னவென்றே அறியாத, ஒரு அரசியல் வியாபாரியான பாண்டியராஜன், ஸ்டாலின் தியாகத்தை விமர்சிப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

Advertisement


வாசகர் கருத்து (59+ 70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
07-நவ-201923:34:13 IST Report Abuse
Abdul Rahman கருணாநிதிக்குப் பிறகு, திருட்டுமுக கழகத்திற்கு தலைவராக வர முழு தகுதி பெற்றவர் கமல் ஹசன் தான். இருவருக்கும், வாழ்வில் ஒரு ஒழுக்கம், நெறிமுறை கிடையாது. பல இணை1, துணை1, மணை1,இணை2, துணை2, மணை2, ... சொல்லவே வார்த்தைகள் இல்லை. இதான் கண்டுபிடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
07-நவ-201923:12:43 IST Report Abuse
s t rajan டிக்கட் வாங்காம சென்னைக்கு வந்த ஒரு மனுஷனோட குடும்பம் சென்னையையே வாங்கிருச்சின்னா, அந்தக் குடும்பத் தலைவரைக் "கலைஞர்" ன்னு அழைப்பதில் தவறே இல்லை. அந்தக குடும்பத்திலே நாய் பேருலயே நானூறு கோடி இருக்கும் போலிருக்கே ? உலகின் ஒப்பற்ற கொள்ளை அரசியல் குடும்பம் என்று உலகிற்கே தெரிகிறதே, ஏன் நம்ப அறிவு கூர்மையுள்ள தமிழக மக்களுக்கு இன்னும் தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
07-நவ-201922:29:16 IST Report Abuse
srinivasan R சுடலை அம்மாவுக்கு சீரியசுன்னு செய்தி வந்துச்சு, தேர்தல் வரும் சிறிது காலத்திற்கு முன் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், இருக்கும் வீட்டை மருத்துமனைக்கு எழுதி வைத்து விட்டு (வேறு வழியில்லாத காரணத்தால் ) மூல பத்திர விஷத்தை அமுக்கி விட்டு, அப்படியே கொடை வள்ளல் பரம்பரை என காட்டி கொண்டு, அனுதாபம் கொடைபரம்பரை என ரெண்டையும் சேர்த்து மக்கள் வாக்கை ஒரே சேரஅள்ள பெரிய திட்டம் இருக்கலாமில்ல. யாரு கண்டது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X