எருமை மாட்டின் விலை ரூ.14 கோடி

Updated : நவ 06, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (27) | |
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 1300 கிலோ எடை கொண்ட எருமை பங்கேற்றது.ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் முர்ரா இனத்தை சேர்ந்த 1300 கிலோ கொண்ட ஆறு வயதுடைய எருமை மாடு பங்கேற்றது. இதன் உருவமே பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது. பலர் மாடு முன் செல்பி எடுத்து கொண்டனர்.மாட்டின் உரிமையாளர் ஜவகர்லால் ஜாங்கிட்
buffalo Bhima worth Rs 14 croreஎருமை மாட்டின் விலை ரூ.14 கோடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 1300 கிலோ எடை கொண்ட எருமை பங்கேற்றது.ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சியில் முர்ரா இனத்தை சேர்ந்த 1300 கிலோ கொண்ட ஆறு வயதுடைய எருமை மாடு பங்கேற்றது. இதன் உருவமே பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது. பலர் மாடு முன் செல்பி எடுத்து கொண்டனர்.மாட்டின் உரிமையாளர் ஜவகர்லால் ஜாங்கிட் கூறியதாவது: இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி,-பாதாம் கொடுக்கிறோம். இதன் பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவாகிறது. இந்த மாட்டிற்கு பீமா என்று பெயரிட்டு உள்ளோம்.latest tamil news


கண்காட்சியில் பங்கேற்கும் முன் மாட்டை ரூ.14 கோடிக்கு கேட்டார்கள். ஆனால் விற்க எங்களுக்கு மனம் வரவில்லை. கண்காட்சிக்கு எருமைகளை பொதுவாக விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை. ஆனால் முர்ரா இனத்தை பாதுகாத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்துள்ளோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

Barathan - chennai,இந்தியா
07-நவ-201920:33:41 IST Report Abuse
Barathan இனி யாரையும் எருமை என்று திட்டாதீர்கள்... அது நல்ல மதிப்பு உள்ளது
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07-நவ-201916:23:29 IST Report Abuse
Loganathaiyyan ஆண் எருமை வெறும் இனப்பெருக்கத்திற்காக இதை உபயோகித்து ரூ 14 கோடி சொல்கின்றார்கள் அதாவது ஒரு ஆண் எருமை பல பல கன்றுகளை கொடுக்கும் வகையில் அதன் விந்துவை உபயோகப்படுத்துவதினால் இந்த விலை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-நவ-201915:54:48 IST Report Abuse
Bhaskaran இந்த மாட்டில் இருந்து எடுக்கப்படும் விந்தினை விற்று உரிமையாளர் கோடீஸ்வரன் ஆணகதையையும் எழுதுங்க ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X