அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிச.,க்குள் உள்ளாட்சி தேர்தல்: ஓ.பி.எஸ் அறிவிப்பு

Updated : நவ 08, 2019 | Added : நவ 06, 2019 | கருத்துகள் (2)
Advertisement
டிசம்பர், உள்ளாட்சி தேர்தல்,ஓ.பி.எஸ்,அறிவிப்பு

சென்னை : 'உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, இன்னும், 15 நாட்களில் வரும். டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். எனவே, தேர்தலில் பணிகளை துவக்குங்கள்' என, அ.தி.மு.க.,வினருக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுசூதனன் பேசுகையில், ''உள்ளாட்சி தேர்தலில், நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமைய வேண்டும்,'' என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் பேசியதாவது:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, இன்னும், 15 நாட்களில் வரும். டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில், நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும். நாம் முறையாக வியூகம் அமைத்து, தேர்தல் பணியாற்றினால், மக்கள் ஓட்டளிக்க தயாராக உள்ளனர்.

இதை, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் உணர்த்தி உள்ளது.எனவே, தேர்தலில் வெற்றி பெற, தேவையான பணிகளை துவக்குங்கள். அனைத்து துறைகளிலும், மற்ற மாநிலங்களை விட, தேசிய அளவில் அதிக விருதுகளை பெற்றுள்ளோம். உள்ளாட்சி துறையில் மட்டும், 12 விருதுகளை பெற்றுள்ளோம். இவ்விபரங்களையும், அரசு நிறைவேற்றி உள்ள திட்டங்களையும், மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் போட்டியிட வேண்டும். மற்றவர்கள், அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் வெற்றி, சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைய வேண்டும்.கூட்டணி விவகாரத்தை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எந்த பதவிகளை, கூட்டணி கட்சிக்கு வழங்கலாம்; எதில் போட்டியிடலாம் என்ற விபரத்தை, மாவட்ட செயலர்கள் வழங்க வேண்டும். மாவட்ட கழகத்துடன் ஆலோசித்து, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-நவ-201917:06:37 IST Report Abuse
Endrum Indian டிசம்பர் 2019,20,21,22???எப்போ???
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
07-நவ-201904:16:44 IST Report Abuse
blocked user தோல்வி பயத்தில் உழலும் சுடலையிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அறிவித்து இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X