பொது செய்தி

இந்தியா

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்று பள்ளிக்கு சுவர் கட்டும் மாணவன்

Added : நவ 06, 2019 | கருத்துகள் (7)
Advertisement
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்று பள்ளிக்கு சுவர் கட்டும் மாணவன்

ஹாசன்: 'டிவி' நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை வைத்து, தான் படிக்கும் அரசு பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க, அப்பள்ளியின் மாணவன் முடிவு செய்துள்ளார்.

மைசூரு மாவட்டம், கடகா கிராமத்தை சேர்ந்தவர் தேஜஸ். இவர், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தனியார், 'டிவி' ஒன்றில் நடத்தும், 'கன்னட கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் பங்கேற்று, 6.40 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.தான் வென்ற பணத்திலிருந்து, ஒரு பகுதியை செலவழித்து, தான் படிக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க, தேஜஸ் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து, தேஜஸ் கூறியதாவது:புனித் ராஜ்குமாருடன், கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. பள்ளி ஆசிரியர்கள் ஊக்கமே, வெற்றிக்கு காரணம். என் பெற்றோருக்கும், நான் வென்றது மகிழ்ச்சி அளித்துள்ளது.எங்கள் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் புகுந்து செடிகளை மேய்ந்து விடுகின்றன.இந்த ஆண்டு, பாதாமி செடிகளை நட்டோம். அனைத்தையும் கால்நடைகள் மேய்ந்து விட்டன. சுற்றுச்சுவர் கட்டினால் செடிகள் தப்பிக்கும் எனக் கருதி உதவி செய்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கு, ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
09-நவ-201911:52:22 IST Report Abuse
Ray GOD BLESS YOU MY DEAR TEJAS, LIVE LONG STUDY WELL A PROSPEROUS LIFE AWAITS YOU அரசாங்கமே சுற்று சுவர் கட்டும்னு யாரோ சொன்னதா செய்தி வந்தது இந்த பையனிடம் பணத்தை வாங்கி பர்சண்டேஜ் போக மிச்சமிருந்தா குட்டி சுவர் கட்டிடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
SUBRAMANIAN P - chennai,இந்தியா
07-நவ-201914:23:33 IST Report Abuse
SUBRAMANIAN P இந்த பையனை நல்லபடியாக வளர்த்திருக்கிறார்கள். இவனால் பெற்றோருக்கு பெருமை. அதுவே ஒவ்வொரு மகனின் கடமை. நம்மவூரில் பிகிலுக்காக ஜெயிலில் கம்பி என்னும் மாணவர்களையும் நல்லாத்தான் வளர்த்திருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
07-நவ-201911:25:05 IST Report Abuse
Nagaraj மிகவும் பாராட்ட பட வேண்டியவன்....தலை வணங்குகிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X