சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலைக்கு காவி, ருத்ராட்சம்

Updated : நவ 08, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (37+ 123)
Advertisement
திருவள்ளுவர், ருத்ராட்சம், கைது, காவி உடை, அர்ஜூன் சம்பத், அவமதிப்பு

தஞ்சாவூர் : தஞ்சையில், திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு மற்றும் ருத்ராட்சம் அணிவித்த, ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத்தை, போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில், தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு செய்யப்பட்டது. பா.ஜ., சார்பில், காவி உடை மற்றும் திருநீறு அணிந்த திருவள்ளுவர் படம், சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது.இதனால் தமிழகத்தில், திருவள்ளுவர் குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது.இந்நிலையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நேற்று காலை, தன் ஆதரவாளர்களுடன், பிள்ளையார்பட்டிக்கு சென்று, திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு மற்றும் ருத்ராட்ச மாலை அணிவித்து, தீபாராதனை காட்டினார். இதனால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, சதயவிழாவையொட்டி, உடையாளூரில் உள்ளதாகக் கூறப்படும், ராஜராஜ சோழனின் சமாதிக்கு, மாலை அணிவிக்க சென்ற அர்ஜூன் சம்பத் உட்பட, நான்கு பேரை, வல்லம் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து, அர்ஜூன் சம்பத் கூறியதாவது:திருவள்ளுவர், ஹிந்து சமூகத்தின் அடையாளம். 'நாயனார்' என்கிற பெயரில், திருவள்ளுவரை தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளாவிலும் வழிபட்டு வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள, திருவள்ளுவரின் கோவிலை, ஹிந்து அறநிலையத் துறையினர் தான் நிர்வகித்து வருகின்றனர். திருவள்ளுவரின் உருவத்தை, திராவிட கட்சியினரும், தமிழக அரசும் வரையும் முன், காவி உடையும், ருத்ராடமும் அணிந்து தான் இருந்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (37+ 123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
08-நவ-201916:01:42 IST Report Abuse
oce நீரில்லா நெற்றி பாழ் என்றனர் பெரியோர். உருத்திராடசமும் விபூதியும் திரிசூரணமும் நாமக்கட்டியும் மனித உடலில் பரவி இருக்கும் நரம்பு மண்டலத்தை முருக்கேறாமல் ஒரே சீராக இயக்குபவை.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-நவ-201920:42:32 IST Report Abuse
Rajagopal பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவனைக் கொண்டாடுகிறார்கள். திருவள்ளுவர் சிலைக்கு இந்து மரபின் படி மாலை அணிவித்தவரைக் கைது செய்கிறார்கள். இது என்ன கூத்தோ தெரியவில்லை. காவியென்றால் குற்றம் என்ற எண்ணத்தை மக்களின் ஆழ் மனதில் விதைக்க முயல்கிறார்கள். எச் ராஜ பெரியார் சிலை உடையும் நாள் தூரத்தில் இல்லை என்றதற்கு அத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். கருணாநிதி, என்று திருவரங்கன் கோயிலை பீரங்கியால் தகர்கிறோமோ, அந்நாளே நன்னாள் என்று சொன்னதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் தனது உண்மை அடையாளத்தை மறக்கும்படியாக அந்த அளவுக்கு இவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்த மதக் கும்பல்களுக்கு நமது பாரம்பரியத்தை விற்கும் எட்டப்பர்கள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
07-நவ-201920:20:29 IST Report Abuse
J.Isaac மனிதனை நல்வழிப்படுத்துகிறதுக்குதான் மதம். 'மதம்' பிடித்து அலைகிறதுக்கு மதம் இல்லை.
Rate this:
Share this comment
Subramaniam - Prague,செக் குடியரசு
08-நவ-201909:13:21 IST Report Abuse
Subramaniamபாதிரிகள் காவி உடையில் மதம் மாற்ற முனைவது 'மதம்' பிடித்ததால் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X