ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர்
ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர்

ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர்

Added : நவ 07, 2019 | கருத்துகள் (107) | |
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே ஹிந்து கடவுளின் படங்களை எரித்த கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தேகோஸ்தே திருச்சபை இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ(53) மதபோதகராக உள்ளார். கடந்த 2ல் திருச்சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து
ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே ஹிந்து கடவுளின் படங்களை எரித்த கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தேகோஸ்தே திருச்சபை இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ(53) மதபோதகராக உள்ளார். கடந்த 2ல் திருச்சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து கடவுளின் படங்களை எரித்துள்ளார். இது தொடர்பான 'வீடியோ' மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.


latest tamil news


இதை பார்த்த எஸ்.குருபட்டி பகுதி ஹிந்து முன்னணி செயலர் மாதேஷ், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். இதையடுத்து பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத போதகர் ஜான் பிரிட்டோவை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (107)

Nathan - Hyderabad,இந்தியா
12-நவ-201907:36:49 IST Report Abuse
Nathan இவனுக்கு எதுக்கு ர்ர் பட்டம், பாதிரியான் ங்க வேண்டியதுதானே.
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
08-நவ-201909:40:05 IST Report Abuse
ரத்தினம் அவங்க அவங்க வேலைய பாத்திட்டு போகாமல் அடுத்தவங்க மதத்தை பழித்து பேசுவதிலும், மத மாற்றத்திலும் குறியாக இருக்கிறார்கள். முதலில் அவர்களை ஊக்கப்படுத்தும் அரசியல் வாதிகளைத்தான் முதலில் உள்ளே போட வேண்டும்.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
08-நவ-201903:52:58 IST Report Abuse
.Dr.A.Joseph சமீப காலங்களாக அனைத்து மதத்திலுள்ளவர்களும் புதிது புதிதாக பிரச்சனைகளை உண்டு பண்ணி கொண்டிருக்கிறார்கள்.இது ஆரோக்கியமானது அல்ல.
Rate this:
Radhakrishnan - Pune,இந்தியா
08-நவ-201922:57:28 IST Report Abuse
Radhakrishnanஜோசப் அவர்களே, சரியாக சொன்னீர்கள்... அனால் ஒன்று. இந்துக்கள் புதிது புதிதாக பிரச்சனைகளை உண்டு பண்ண வில்லை. மாறாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். தங்கள் மீது நடக்கும் அக்ரமத்திற்கு எதிர்த்து போராடுகிறார்கள். நல்லோர்களின் ஆதரவு அவர்களுக்கு வேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X