ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25,000 கோடி நிதி: நிர்மலா சீதாராமன்

Updated : நவ 08, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (12+ 45)
Advertisement
ரியல் எஸ்டேட், நிதியுதவி, நிர்மலா சீதாராமன், வீடுகள், கட்டுமான கடன்

புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் பாதியில் நின்று போன கட்டுமானங்களுக்கு கடன் வழங்க ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தோராயமாக மதிப்பிட்டதில் 1600 திட்டங்களில் கட்டப்பட்டு வந்த 4.58 லட்சம் வீடுகள் பாதியில் முடங்கியுள்ளன. முடிக்கப் படாமல் பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசு சார்பில் 10 ஆயிரம் கோடி ரூபாயும் ஸ்டேட் பாங்க் மற்றும் எல்.ஐ.சி. சார்பில் 15 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12+ 45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
07-நவ-201921:55:46 IST Report Abuse
Raj முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதைதான் இது இவர் எப்படி இன்னும் பதவியில் உள்ளார் என்பதுதான் ஒரே மர்மமாக உள்ளது ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்க ஆள் இல்லை இந்நிலையில் யாரை திருப்தி படுத்த இந்த நடவடிக்கை ... இப்படி அநியாயமாக செலவு செய்யும் பணத்தை முறைப்படுத்த வேண்டும் இல்லை என்றால் அனைவரும் கூடிய சீக்கிரம் ரோட்டில் நிற்க வேண்டியதுதான். ஒரு நிதி அமைச்சருக்கு ஏன் இது விளங்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
07-நவ-201916:26:01 IST Report Abuse
Gopi இந்த பணத்தை வீடில்லாதவர்கள் கணக்கில் வரவு வைத்து அதையே ரியல் எஸ்டேட் ப்ராஜக்டுகளில் செலுத்தி இருந்தால் இருதரப்பினரும் பயனடைந்திருப்பர். நீங்கள் மறுபடியும் இந்த எதேச்ச அதிகார கும்பலுக்கே உதவி செய்தால் இவர்கள் கட்டிய வீட்டின் விலையை குறைவாகவா விற்பார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
07-நவ-201912:09:13 IST Report Abuse
Asagh busagh அரசியல் கேடிகளும், பினாமிகளும் புரளும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அரசு உதவி செய்வது பலருக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தலாம். ஆனாலும் உண்மை நிலவரம் என்னனா, வளர்ந்து வரும் நடுத்தர மற்றும் lower மிடில் கிளாஸ் மக்களின் தேவைய பூர்த்தி செய்ய வரும்காலங்களில் சப்ளை தேவை. அதற்கு கட்டுமான பணி திட்டமிடல் இப்போவே தேவை. அதனால் அரசுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் பலர் மாஃபியா என்று தெரிந்தாலும் அவர்களிடம் தான் அடிப்படை கட்டுமான இயந்திரங்கள் இருப்பதால் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம். மக்களாகிய நாமோ எல்லா பிரச்னைகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்கிற சோசியலிச மனப்பான்மை. இதெற்கெல்லாம் மூல காரணம் கட்டுக்குள் இல்லா மக்கள் தொகை வளர்ச்சி என்ற சாபகேடு தான். ஆனால் 2050 வரை அது குறையவும் வாய்ப்பில்லை. யாரை குறை சொல்லி என்ன ஆகப்போவது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X