அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வராக ஜெ., பதவியேற்கிறார்., ராகு- கேது பெயர்ச்சி பலனில் பணி துவக்கம்

Updated : மே 14, 2011 | Added : மே 13, 2011 | கருத்துகள் (243)
Advertisement
 Jayalalithaa, as CM may sworn on Monday, முதல்வராக, ஜெ., பதவியேற்கிறார்.,

சென்னை: நாளை மறுநாள் (16ம் தேதி ) வரும் திங்கட்கிழமை வாரத்தின் முதல்நாளில் , அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வராக பதவியேற்கிறார். ராகு - கேது பெயரும் நேரத்தில் ஜெ., பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்றுள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மதியம் ஜெ., தலைமையில் நடப்பதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

நாளை காலை 9. 30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஜெ., தலைமையில் எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஜெ., அ.தி.மு.க., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்படுவார் பின்னர் தொடர்ந்து கவர்னரை சந்தித்து பேசுவார். இதனை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்க வருமாறு அழைப்பு கொடுப்பார்.


பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் பதவி‌யேற்பு விழா : வரும் திங்கட்கிழமை காலை சென்னை பல்கலை., நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் விழாவில் முதல்வராக ஜெ., பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் உள்பட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலையில் 9. 55 க்கு ராகு, கேது பெயர்ச்சி இருப்பதால் இந்நாளில் அவர் பதவியேற்க முடிவு செய்திருக்கலாம் என அ.தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது .





சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ‌ஜெயலலிதா, நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக கூறினார்.


தலைவர்கள் சிலைகளுக்கு ஜெ., மரியாதை செலுத்தினார் : முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெ., இன்று மதியம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர், மவுண்ட்ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையிட்டு, தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி மற்றும் அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 147ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தின், 14வது சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை நடந்தது. ஆரம்பம் முதல், அ.தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங் களில் முன்னணியில் இருந்தது.பெரும்பாலான, அ.தி.மு.க., கூட்டணியினர் வெற்றி முகத்தில் இருந்தனர். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல, தி.மு.க., தலைமையின் குடும்ப சிபாரிசு மூலம் சீட் வாங்கியவர்களும் தோல்வியடைந்தனர்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற, 118 எம்.எல்.ஏ.,க்களே தேவை என்பதால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பது மிக எளிதானது.

தே.மு.தி.க., போட்டியிட்ட, 41 தொகுதிகளில், 29ல் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிரதான எதிர்க்கட்சி வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வே பிரதான எதிர்க்கட்சி ஆகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளும், பிரதான கட்சிகளை எதிர்த்து, தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா, திருவாரூரில் கருணாநிதி, ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியினர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பும், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பும் குவிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டனுக்கு படையெடுத்தனர்.

அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியானது தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கவர்னருக்கு, கருணாநிதி அனுப்பி வைத்தார்; அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (243)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
viswanathan - madurai,இந்தியா
14-மே-201122:17:16 IST Report Abuse
viswanathan 1 அள்ளி தந்தவர்களுக்கு அரசு ஊழியர்கள் வைத்த ஆப்பு. 2 சுழல் நிதி கொண்ட மகளிர் தந்த நல்ல வெகுமதி. 3 சத்துணவு ஊழியர்கள் கொடுத்த சன்மானம். 4 இலங்கை பிரச்சினையில் தோற்கடிக்கபட்டான் இராமன்.விபீஷ்ணன் அல்ல. 5 வர்ணாசிரம தத்துவத்தை வீழ்த்தியவர்கள் வீழ்ந்தார்கள். 6 நுழைவு தேர்வை நுழையவிடாமல் செய்தவர்கள் நொந்துதான் போனார்கள். 7 அண்ணா பல்கலை கண்டவர்கள் அண்ணாந்து பார்த்தார்கள். 8 சமத்துவபுரம் வீழ்ந்தது. 9 சமத்துவ கல்வி தந்தவர்கள் சமைந்துதான் போனார்கள். மொத்தத்தில் தமிழனை ஆள்வதற்கு தமிழன் தேவை இல்லை. இது தமிழன் தந்த தீர்ப்பா ? இல்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தந்த தீர்ப்பு. தலை வணங்கி ஏற்பு.
Rate this:
Share this comment
Cancel
raji - Bangalore,இந்தியா
14-மே-201121:03:29 IST Report Abuse
raji வாழ்த்துக்கள் மேடம் ஜெயா - தமிழ் நாட்டை சோலை வனம் ஆக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
Subburajpiramu Subburaj - Srivilliputtur,இந்தியா
14-மே-201120:58:44 IST Report Abuse
Subburajpiramu Subburaj தமிழ் மக்கள் நல்லாட்சி வேண்டி தங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். அகவே பலிவாங்கும் போக்கை விட்டு நல்லாட்சி அருளுங்கள் வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X