அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெ., பேட்டி

Updated : மே 15, 2011 | Added : மே 13, 2011 | கருத்துகள் (42)
Advertisement

சென்னை: ""தேர்தல் வெற்றி, எங்களுக்கு கிடைத்தது அல்ல; தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. பொருளாதாரத்தை சீரமைப்பதும், சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதும்தான் முதல் பணி. அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியை அமைக்க உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தனது இல்லத்தில் நேற்று அளித்த பேட்டி:

*மகத்தான வெற்றியை எதிர்பார்த்தீர்களா...?

தமிழக மக்களுக்கு, வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல, தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் பணபலம் கண்டிப்பாக தோற்றுப் போய்விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக தி.மு.க., அரசு மீது, தி.மு.க.,வினர் மீது மக்கள் ஆத்திரத்தில், கோபத்தில் இருந்தனர். தி.மு.க., அரசு எல்லா மட்டத்திலும் முறைகேடில் ஈடுபட்டதால் எப்போது தேர்தல் வரும் என காத்திருந்தனர். அந்த கோபத்தின் வெளிப்பாடை தேர்தலின் காண்பித்ததன் விளைவுதான் இந்த வெற்றி.

*தமிழகத்தில் நிதிநிலைமை எப்படி உள்ளது, எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

தமிழகம் என்ற அழகான வீடு பாழடைந்து, தூர்ந்து போகும் நிலையில் உள்ளது. இதை சீரமைப்பது என்பது சாதாரணமல்ல. அதுபோலத்தான் மாநிலத்தின் பொருளாதாரச் சீரழிவு உள்ளது. கடந்த 1991, 2001ம் ஆண்டுகளில் நான் ஆட்சிக்கு வந்தபோது, கஜானா காலியாகி, அரசை நடத்த முடியாத நிலை இருந்தது.மக்களுக்கு கசப்பு மருந்தெல்லாம் கொடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கிகள், பிற மாநிலங்கள் எல்லாம் பாராட்டும் வகையில், நிதிநிலையை மீட்டெடுத்து, சாதித்தோம். அப்போது ஆயிரம் மடங்கு சீரழிவு என்றால், தற்போது 10 ஆயிரம் மடங்கு சீரழிவு உள்ளது. இதை சீரமைப்பது, மேம்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றாலும், சாதிப்போம்.

*அ.தி.மு.க., அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்...?

பொருளாதாரத்தை சீரமைப்பதோடு, சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதே முக்கிய பணியாக இருக்கும். அதே நேரத்தில், அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் உறுதியாக நிறைவேற்றுவோம்.

*பொருளாதாரச் சீரழிவு உள்ள நிலையில், மத்திய அரசுடன் உறவு எப்படி இருக்கும்?

பொறுத்திருந்து பாருங்கள், போகப்போக உங்களுக்கே தெரியும்.

*எப்போது, எங்கு பதவியேற்பு விழா நடக்கும்?

தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வந்தடையவில்லை. தேர்தல் முடிவுகள் வந்தபின் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும். கூட்டத்தில் நான் சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்பின், நான் கவர்னரை சந்திக்க வேண்டும். அவர் என்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அவரிடமிருந்து அழைப்பு வந்தபின் தான், எப்போது பதவி ஏற்பது என்பதை முடிவு செய்ய முடியும்.

*தேர்தல் கமிஷனின் செயல்பாடு?
தேர்தல் கமிஷன் பாராபட்சமின்றி செயல்பட்டது. அவர்களது பணி சிறப்பாக, பாராட்டும் வகையில் இருந்தது. அவர்களுக்கு எங்கள் நன்றி.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayashree ravi - natick,யூ.எஸ்.ஏ
14-மே-201120:12:42 IST Report Abuse
jayashree ravi இதே தினமலர் இதழில் தெரியாமல் இலங்கையில் புலிகள் எவ்வாறு தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள், என்றெல்லாம் நினைத்து புலிகளை இலங்கை வென்று அதன் பின் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்று நினைத்து எழுதிவிட்டேன். செல்வி அன்னை ஜெயலலிதா இலங்கையை சரியாக பழிக்குப்பழி வாங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Baskar M - vellore,இந்தியா
14-மே-201119:31:17 IST Report Abuse
Baskar  M ஜெயாவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியை பற்றி தெரியாத, இன்னும் ஆணவ போக்கை மாற்றி கொள்ளாத ஒருவரை இந்த புதிய வாக்காளர்கள் (21 ,22 வயது பொடியன்கள்) தேர்வு செய்துள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு நலத்திட்டங்களை கருணாநிதி மட்டும் தான் செய்துள்ளார். இது வரலாறு யாரும் இதை மறைக்க முடியாது. கருணாநிதி கட்டிய சட்டசபை கட்டிடத்தில் ஆட்சி செய்ய மாட்டேன் என்று சொல்லும் ஜெயா சென்னை முழுக்க கருணாநிதி கட்டிய மேம்பாலங்களில் பயணம் செய்யாதே. இப்பொழுதே ஆணவ போக்கு ஆரம்பம் ஆகிவிட்டது. புதிய வாக்காளர்களே பார்க்கத்தான் போகிறீர்கள். 2001 இல் உங்களுக்கு வயது 11 அல்லது 12 எனவே ஜெயா வை பற்றி தெரியாது. வேடிக்கை பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் சொல்லியுள்ள விஷயங்கள் தினமலருக்கே நன்றாக தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
s.periyasamy - tirupur,இந்தியா
14-மே-201118:50:45 IST Report Abuse
s.periyasamy தமிழக மக்களுக்கு ஒரு நல்ல தினம். 5 ஆண்டு கொலை, கொள்ளைகும்பல் ஆட்சி முடிவுக்கு வந்தது. வாழ்க புரட்சி தாய் அம்மா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X