எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வழக்கத்தை விட முன்கூட்டியே பனி பொழிவு: வட மாவட்டங்களுக்கு மீண்டும் வறட்சி ஆபத்து

Added : நவ 07, 2019
Advertisement
வழக்கத்தை விட முன்கூட்டியே பனி பொழிவு: வட மாவட்டங்களுக்கு மீண்டும் வறட்சி ஆபத்து

சென்னை: புயல்களால் பருவமழை குறைந்து விட்ட நிலையில், பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. ஊட்டியில் குறைந்த பட்ச வெப்பநிலை, 8 டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், நீர் நிலைகளுக்கு முக்கிய ஆதாரமாக திகழும் தென் மேற்கு பருவமழை, ஜூன் முதல், அக்டோபர் வரை பெய்தது. இந்த ஆண்டு, இயல்பை விட, 47 சதவீதம் அதிக மழை பெய்தது. அதனால், வட மாநிலங்களிலும், கர்நாடகா, கேரளாவிலும் நீர்நிலைகள் நிரம்பின.இதையடுத்து, அக்., 16 முதல், வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்த மழை, 10 நாட்கள் வரை, தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. அதனால், ஏரி, குளங்களில் ஓரளவு நீர் மட்டம் அதிகரித்தது.

அதன்பின், அரபி கடலில் உருவான, 'கியார்' புயல் மற்றும், 'மஹா' புயல்களின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்து விட்டது. மஹா புயல் வலுவிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், வங்க கடலில் மற்றொரு புயல், 'புல் புல்' உருவாகி உள்ளது. இந்த புயல், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் மேக கூட்டங்களை திசை மாற்றி விட்டதால், தமிழகத்தில் மீண்டும் வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காலை நேர பனி பொழிவு, இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் ஆகியவற்றிலும், காலை நேர பனி மூட்டம் காரணமாக, குறைந்த பட்ச வெப்பநிலையின் அளவும் குறைந்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, ஊட்டியில், 8 டிகிரி செல்ஷியஸ்; கொடைக்கானல், 10; குன்னுார், வால்பாறை, 13; தர்மபுரி, 20, சென்னை மீனம்பாக்கம், வேலுார், 22 டிகிரி செல்ஷியஸாக, குறைந்த பட்ச வெப்பநிலை பதிவானது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும், நவம்பர் இறுதியில் தான் பனிப் பொழிவு துவங்கும், டிசம்பர் மற்றும் ஜனவரியில், பனிப் பொழிவு அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு, புயல்களால் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால், இயல்பை விட, ஒரு மாதம் முன்பே பனிப் பொழிவு துவங்கி உள்ளது.அதனால், இயல்பாக பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை, 2018ம் ஆண்டை போல் பொய்த்து விடுமோ என, விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் அச்சத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையை நம்பியுள்ள வட மாவட்டங்களில், மீண்டும் வறட்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X