பொது செய்தி

தமிழ்நாடு

மனைவியாகும் பெண்ணின் உயிரை பறித்த டிவி சிரீயல்

Updated : நவ 07, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (51)
Advertisement
செல்பி, சீரியல், இளம்பெண், மெர்சி, அப்பு, மரணம்,உயிரிழப்பு

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஒரு சேனலில் 'சரவணன் மீனாட்சி' சீரியலை பார்த்து அதே போன்று செல்பி எடுக்க முயன்றதால் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்த மெர்சி உயிரிழந்ததாக, உயிர் தப்பிய இளைஞர் அப்பு கூறியுள்ளார்.

சென்னை பட்டாபிராம், நவஜீவன் நகரை சேர்ந்தவர் அப்பு, 24. அதே பகுதி, காந்தி நகரை சேர்ந்த மெர்சி,2 3. இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவருக்கும், செப்.,30ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்கள் கடந்த 4ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், ஆவடி அடுத்த மிட்ணமல்லி கண்டிகை கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள 30 அடி ஆழ விவசாய கிணற்றின் உள்ளே, படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கிணற்றில், 14 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. அவர்கள், 'செல்பி ' எடுக்க முற்படும் போது, மெர்சி எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற, அப்புவம் உள்ளே விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களது அலறலை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதில், அப்பு உயிருடன் மீட்கப்பட்டார். மெர்சி நீரில் மூழ்கி இறந்தார். அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அப்பு போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் : கிணற்றுக்குள் இறங்கி கடைசி படிக்கட்டில் நின்று செல்பி எடுக்க சொன்னது மெர்சிதான். ஒரு டிவி சேனலில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொலைகாட்சி தொடரில் கிணற்றுக்குள் அமர்ந்து கதாநாயாகியும் கதாநாயகனும் செல்பி எடுப்பது போல் சீன் வரும். அதே போல் எடுக்க முயன்ற போது தான் கிணற்றுக்குள் விழுந்த விபரீதம் நிகழ்ந்தது. நீச்சல் தெரியாத என்னை காப்பாற்றியது போல், மெர்சியையும் காப்பாற்றி இருக்கலாம் என்றார்.
ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கக்கூடாது என போலீசார் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். அதையும் மீறும் பலர் இறந்து வருகின்றனர். ஆனால், செல்பி மோகம் காரணமாக, டிவி சீரியலை பார்த்து அதேபோல் செய்ய முயன்றதால், இளம்பெண்ணின் உயிரும் பறி போயுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-நவ-201916:28:00 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்துக்களுக்கு இரக்கம் வேண்டாம் அப்படி என்ன சீரியல் பயித்தியம்னேன் வெட்க்கமாஇல்லீயா ஏய் அதுகள் அப்படி நடிச்சால் துட்டுகிட்டும் உனக்கு உசிரெபோயாச்சு சீ , சீரியல்கள் பார்ப்பதே இல்லீங்க இவளையும் தெரியாது பொழுதுபோலின்னா கண்ணுலே படும் ஏதாச்சு கன்றாவியா
Rate this:
Share this comment
Cancel
Prakash - tamilnadu,இந்தியா
08-நவ-201909:21:14 IST Report Abuse
Prakash இன்றைக்கு படித்தவர்களும் சரி படிக்காதவர்களும் சரி மூளை இல்லாமல் தான் செயல்படுகின்றனர்.... என்றைக்கு திருந்த போகின்றனரோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்..............
Rate this:
Share this comment
Cancel
அசால்ட் ஆறுமுகம் இது ஏன் கொலையாக இருக்கக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X