இந்த செய்தியை கேட்க
சென்னை: தன் காதலன் விரும்பியதால் அவருக்கு தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவிகளை விருந்தாக்கிய டீச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தி.நகரை சேர்ந்த சஞ்சனா, தன் வீட்டிலேயே டியூசன் எடுத்து வருகிறார். அவரிடம், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பயில்கின்றனர். சஞ்சனாவுடன் அவரது காதலர் பாலாஜி, சில காலமாக பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், தன்னுடன் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதற்கு, உன் டியூசன் மாணவிகளை எனக்கு விருந்தாக்கினால் தான் உன்னுடன் பேசுவேன் என பாலாஜி டீல் பேசியுள்ளார். சஞ்சனாவும் இதை செய்தால் தான் காதலன் பேசுவான் என நம்பி இந்த டீலுக்கு ஓகே சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

தன் மாணவி ஒருவரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதிக்கு சஞ்சனா அழைத்து வந்துள்ளார். அவர்களுடன் பாலாஜியும் சென்றுள்ளார். பின், பெட்ரூமுக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அனைத்தையும், வீடியோ, போட்டோவாக எடுத்துள்ளார். இதே போன்று, மேலும் சில மாணவிகளையும் தன் விருப்பத்துக்கு இணங்க வைத்த பாலாஜி, போட்டோ, வீடியோவை காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இதனால் பாதிப்படைந்த ஒரு மாணவி, போலீசிடம் புகார் கொடுத்ததால், இவர்களின் தில்லுமுள்ளு தெரியவந்தது.
இருவரும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, மிரட்டி வழிப்பறி செய்தல், மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல், துன்புறுத்துதல், மிரட்டி அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.