இந்த செய்தியை கேட்க
ஐதராபாத்: தெலுங்கானாவில் தாசில்தார் எரித்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவில் தாசில்தார்கள், கயிறு கட்டி அதன் பின்னால், நின்று வேலை பார்த்தனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்பூரமெட் பகுதியில், விஜயா ரெட்டி என்ற தாசில்தார் அவரது அலுவலகத்தில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அதிகாரிகள் பயம் காரணமாக கயிறு கட்டி வேலைபார்த்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஆந்திராவின் கர்னூல் தாசில்தார் உமா மகேஸ்வரி என்பவர், கூறுகையில், விஜயா கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, போதையில் சிலர் எனது அலுவலகத்திற்கு விண்ணப்பம் ஏதும் இல்லாமல் வந்தனர். அவர்களை பார்த்து பயம் ஏற்பட்டது. இதனால், எனது நாற்காலி மற்றும் சந்திக்க வருபவர்கள் இடையே கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினேன். சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே கயிறு கட்டி வைத்திருந்தேன். அதன் பின்னர் அதனை அகற்றி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE