என்ன நடிப்பு காமெடி, சீரியஸ் கேரக்டர்களில் இப்படி நடிக்குதேப்பா இந்த பொண்ணு... என திரையில் பார்த்ததும் பாராட்ட துாண்டும் அளவிற்கு ரசிகர்களிடம் 'ரீச்' ஆன நடிகை ரேஷ்மா மனம் திறக்கிறார்...
* உங்களைப் பற்றி சொல்லுங்க?அப்பா தெலுங்கு தயாரிப்பாளர். பாபி சிம்கா என் சகோதரர் தான். 2008ல் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானேன். அதற்கு முன் அமெரிக்காவில் இருந்தேன். தெலுங்கு டிவியில் இங்கிலீஷ் நியூஸ் ரீடரா இருந்தேன். 'மசாலா படம்' மூலம் இரண்டாவது ஹீரோயின் ஆனேன். 'வேலைனு வந்திட்டா வெள்ளைக்காரன்'ல் 'புஷ்பா புருஷன்' கேரக்டர் என்னை பிரபலமாக்கியது.
* காமெடி கேரக்டர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்குதா?மலையாள, தெலுங்கு படங்களில் ஹீரோயின், வில்லி கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். என்னை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது காமெடி கேரக்டர்கள் தான்.
* பிக்பாஸில் இருந்து வந்த பின் படவாய்ப்புகள் பிக் பாஸ் போகும் முன்னாடியே 2 படம் நடிச்சுட்டேன். வெளியே வந்த பின் 'பேய் மாமா'ங்குற படம், அஞ்சலியோட ஒரு படத்தில் நடிக்கிறேன்.
* திரும்ப பிக்பாஸ் போக ஆர்வம்?திரும்ப என்னை கூப்பிட மாட்டாங்கனு நினைக்கிறேன். பிக் பாஸ் வீட்டிற்கு போறவங்க ரொம்ப உண்மையா இருங்க; பொய்யா இருக்காதீங்க. நீங்களா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு போகாதீங்க. உங்கள் தனித்திறனை வெளிப் படுத்துங்கள்
* பிக் பாஸ் திட்டமிட்ட ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி தானா?அப்படி எல்லாம் இல்லை; வீட்டுக்குள் பிக்பாஸ் தவிர வேறு குரல் நாங்கள் கேட்டதே இல்லை. வேறு ஒரு முகம் பார்த்தது இல்லை. 16 பேரை தவிர வேற யாரும் பேச மாட்டாங்க. ஸ்கிரிப்ட் பண்றதுக்கு டைம் இருக்காது. 24 மணி நேர நிகழ்ச்சி; எடிட்டிங் டீமுக்கு தான் நன்றி சொல்லணும்.
* வீட்டுக்குள் மேக்கப் போட்டு இருப்பீங்களா?காலையில் மேக்கப் போட்டா எனக்கு கலையாது. டைம் கிடைக்கும் போது மேக்கப் பண்ணிக்குவோம்..
* முகேன் வெற்றியாளராக தேர்வானது பற்றி?ஆரம்பத்திலிருந்தே தர்ஷன், முகேன், சாண்டி வருவாங்கன்னு நம்பிக்கை இருந்தது. அதே மாதிரி முகேன், சாண்டி இறுதி வரை வந்தாங்க.
* இவ்வளவு நாள் இருப்போம்னு நினைச்சீங்களா?வீட்டுக்குள் 47 நாள் இருந்தேன். நண்பர்களிடம் நல்லா பழகி விட்டால் உள்ளே எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்கலாம். வெளியில் வரும் போது மக்கள் என்ன எப்படி பார்ப்பாங்கன்னு ஆர்வமா இருந்தது.
* 'புஷ்பா புருஷன்' கேரக்டர் ரீச் எப்படி?பிக்பாஸ் கூட அந்த பேருக்காக கிடைத்த வாய்ப்பு தான். ரொம்ப ஜாலியா பண்ணின படம். எங்கே போனாலும் 'புஷ்பா...புஷ்பா'ன்னு கூப்பிடற அளவு பிரபலமாயிட்டேன்.
* உங்க எதிர்கால ஆசை?இப்போதைக்கு பசி இருக்கு சாப்பிடனும்; அவ்ளோ தான்! சாப்பிட தானே இவ்வளவு கஷ்டம். நான் எப்பவுமே சந்தோஷமா இருக்கேன்னு சொல்லலாம். என்னை மாதிரி எல்லோரும் ஜாலியா இருங்க.