அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலை வள்ளுவராக்கிய ரசிகர்கள்

Updated : நவ 07, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (142)
Share
Advertisement
திருவள்ளுவர், கமல், கமலஹாசன், மக்கள் நீதி மையம், மக்கள் நீதி மய்யம், மநீம, மநீமை, ரசிகர்கள், போஸ்டர்

இந்த செய்தியை கேட்க

சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை, திருவள்ளுவராக சித்தரித்து, ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ம.நீ.மை., கட்சி தலைவரும், நடிகருமான கமல் இன்று (நவ.,7) 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், கமலை, திருவள்ளுவராக சித்தரித்து, அவரது ரசிகர்கள் சென்னையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில்,'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற திருக்குறளை,'அகர முதல எழுத்தெல்லாம் உலக நாயகன் முதற்றே உலகு ' என மாற்றி எழுதியுள்ளனர். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsதற்போது, திருவள்ளுவர் விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல், திருவள்ளுவர் எல்லா மதத்தினரும் தனதாக்கி கொள்ள விரும்புகிறார்கள். திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதுதான் உண்மை. அவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை'' என்றார்.
ஆனால் அவரது ரசிகர்கள் இதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், கமலையே திருவள்ளுவர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
11-நவ-201918:15:35 IST Report Abuse
bal காவி பூசியதற்கு இந்த கமல் குதித்தாரே...இப்போ என்ன செய்வர் இவர் ரசிகர்களை...வள்ளுவர் என்ன மூணு கல்யாணம் பண்ணியவரா கமலை போல்.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
13-நவ-201920:54:26 IST Report Abuse
Rayமேரிமாதா ஆக்கியபோது சென்னையில் இல்லையோ? ஒருவேளை அது பொருத்தமாக பட்டதோ?...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
13-நவ-201920:58:30 IST Report Abuse
Rayஎது எப்படியோ இருக்கட்டும் ஆனா பாருங்க அடடா நூறு சதவீதம் பொருந்தியிருக்கே முகத்தில் அத்தனை சாந்நித்யம் அந்த ஒளிவட்டம் மட்டும்தான் விட்டுப் போச்சு இனி இதையே வச்சிக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-நவ-201906:23:03 IST Report Abuse
D.Ambujavalli ரசிகர்களும், தொண்டர்களும் தலைகால் தெரியாமல் ஏதாவது செய்து விடுகிறார்கள் மறைந்த ஜெயை வேளாங்கன்னியம்மன், அம்மனாக உருவேற்றி அம்மனை அவமதிக்கவில்லையா ? ‘சாமி, பழனிசாமிக்கு அர்ச்சனை செய்யுங்கள் ‘என்று விளம்பரப்படுத்தவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-நவ-201916:38:48 IST Report Abuse
skv srinivasankrishnaveni கன்றாவியாயிருக்கே ப்ளீஸ், வள்ளுவன் எங்கே, இவனெல்லாம் எங்கே, எந்தக்குரலுக்கும் இவன் சமமே இல்லே தெரியுமா ??கேரக்டர் ஜீரோ என்பது உலகறிஞ்ச உண்மை! வள்ளுவருடன் ஒப்பிட்டவனை உப்பில்லாமல் களி தின்ன வைக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X