அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் காலம் வரும்: பிரேமலதா பேராசை

Updated : நவ 07, 2019 | Added : நவ 07, 2019 | கருத்துகள் (30)
Advertisement
DMDK, LocalBodyElection, Vijaykanth, Premalatha, தேமுதிக, விஜயகாந்த், பிரேமலதா, உள்ளாட்சி தேர்தல்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தேமுதிக நிச்சயம் ஒருநாள் ஆட்சி அமைக்கும எனவும், அதற்கான காலம் கனியும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.




பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி பொருளாளர் பிரேமலதா கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முடிவாகும் பொழுது நாங்கள் அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றோம். அதனால், எங்களுக்கான இடங்களை கேட்டு பெற முடியாமல் அவர்கள் கொடுத்த 4 இடங்களில் போட்டியிட்டோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள அனைவரையும் குழு அமைத்து, எங்களுக்கு எத்தனை சதவீத இடங்கள் வேண்டும் என பேசி முடிவு செய்வோம்.




விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்ட போது, தேமுதிக.,வின் பலம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். எங்கள் பலத்தை அறிந்த முதல்வர் உள்ளாட்சி தேர்தலில் உரிய இடங்கள் வழங்குவதாக தெரிவித்தார்.
தற்போது ஆளும்கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்தாலும், நிச்சயம் ஒருநாள் தேமுதிக ஆட்சி அமைக்கும். எங்களுக்கும் அதற்கான காலம் வரும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
08-நவ-201907:21:57 IST Report Abuse
arudra1951 தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு இளிச்சவாயர்களா ? இலவு காக்கும் நாயுடு
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
08-நவ-201906:31:37 IST Report Abuse
Anandan இந்த இத்து போன கட்சியை கூட்டணியில் வைத்திருக்கும் அதிமுக லட்சணம் அப்படி இருக்கு இல்லைனா இந்த கட்சி இருந்த இடம் தெரியாம போயிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
07-நவ-201921:59:47 IST Report Abuse
PANDA PANDI கூட்டணியில் பற்பல COMEDY PIEACE.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X